Sunday 20 April 2014

‘காந்தி’ வருகிறார்...பராக் . . .பராக் . . .

இன்னும் சில தினங்கள்`காந்திஉங்கள் வீட்டுக்கதவுகளைத்தட்டலாம்.காந்தியென்பதால்கம்பு ஊன்றிவரமாட்டார்.உருளைக்கட்டைதுணைகளோடுதான்வருவார்.காந்தியென்பதால்கதராடைஅணிந்திருப்பாரென்றுகனவுகாணவேண்டாம்கதராடையையேகாங்கிரஸ்காரர்கள்கைகழுவி நாளாகி விட்டது.திராவிடக் கொழுந்துகளின்வழியாகவே உங்களை சந்திக்க அவர் வருவதால்கரைவேட்டிகளுடன் தான்காட்சியளிப்பார்.குழப்பமடைய வேண்டாம்.முதல் முதலாகதிக்குத் தெரியாமல் திருமங்கலத்திற்குள் நுழைந்து திகைத்த காந்திக்குஇப்போது இந்தியா முழுவதும் அத்தனை தெருக்களும் அத்துப்படி.ஜன்னல்கள், கதவுகளின்இடுக்குகளின் வழியாகக் கூடகாந்தி உங்கள் வீடுகளுக்குள்பிரவேசிக்கக் கூடும்.கவனமாயிருங்கள்.காந்தி தேசமென்பதுகரன்சிகள் தேசமல்ல என்பதை அவருக்குச் சொல்லுங்கள்.

தீக்கதிர் - .கவிதா குமார்
தமிழகத்தில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்திருப்பது இடதுசாரிகள் மட்டுமே. காலம் கடந்து நிகழ்ந் திருந்தாலும், சரியான முடிவு. அதை நான் வரவேற்கிறேன். கடந்த காலங்களில் கொள்கையற்ற கூட்டணிகளில் அங்கம் வகித்த போதும், ஆளுங்கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்க கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் தவறியது இல்லை. இப்போது இரண்டு கம்யூனிஸ்ட்களும் கூட்டணி அமைத்து மக்களை அணுகியிருப்பது, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் உள்ள கட்சிகளில் கம்யூனிஸ்ட்களைப் போல தொண்டு, தியாகம் செய்த கட்சிகள் வேறு இல்லை. அரசியலுக்கு வந்தவுடன் பல தலைவர்கள் கோடீஸ்வரர்களாகி ஆடம்பர வாழ்க்கை வாழும்போது, தோழர் நல்லகண்ணு, சங்கரய்யா போன்றவர்கள் எளிமை வாழ்க்கை வாழ்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. -
நன்றி : ஜுனியர் விகடன் (ஏப்.23) ஏட்டில் பழ.நெடுமாறன் பேட்டியிலிருந்து...

No comments: