Wednesday, 9 April 2014

குஜராத் மாநிலத்தில் டாடாவுக்கு `ஜாக்பாட்’ . . .

மேற்குவங்கத்தில் அமைக்கப்படவிருந்த நானோ தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றப்பட்டது. சானந்த் நகரில் டாடா காண்பித்த இடத்தை ஒரே நாளில் அங்கிருந்த விவசாயிகளை அடித்து விரட்டிவிட்டு அவர்களுக்கு இழப்பீடு என்ற ஒரு சொற்பத் தொகையை வழங்கிவிட்டு 1,100 ஏக்கர் நிலத்தை சதுர மீட்டர் 900 ரூபாய் என்ற கணக்கில் 400 கோடிக்கு விற்றிருக்கிறார்கள். அந்த நிலத்தின் சந்தை மதிப்பு 10,000 கோடியாகும். இதைத்தவிர தொழிற்சாலை துவங்குவதற்கு டாடாவிற்கு ரூ.9,950 கோடி கடனாக 0.1சதவீத வட்டி வீதத்தில் 20 ஆண்டுகளுக்கு வழங்கியது. தொழிற்சாலைக்கு தேவைப்படும் மொத்த முதலீடே 2,200 கோடி மட்டுமே! இதைத்தவிர வரிச்சலுகை, மின் சலுகை போன்றவைகளைக் கணக்கிட்டால் குஜராத் மக்கள் பணம் டாடா கணக்கில் 30,000 கோடி சேர்ந்திருக்கிறது. மோடி தயவில் டாடாவுக்கு கிடைத்த `ஜாக்பாட்இது!


           ----  தீக்கதிர் 

No comments: