
ஆண்டு - குஜராத்தின் கடன்
2001-2002 - ரூ.45,310 கோடி
2005-2006 - ரூ.94,000கோடி
2009 - ரூ.1,05,000 கோடி
ஒரு மாநிலம் அல்லது தேசம் கடனே வாங்கக்கூடாது என்பது அல்ல! மக்களின் நலனுக்காக ஒரு தற்காலிக காலத்திற்கு கடன் வாங்குவதோ அல்லது பற்றாக்குறை பட்ஜெட் போடுவதோ தவறு அல்ல! ஆனால் பெரும் நிறுவனங்களும், முதலாளிகளும் கொழுத்திட கடனாளி ஆக்குவது மிகப்பெரிய குற்றம் மட்டுமல்ல மக்கள் விரோத செயலும் கூட!குஜராத்தில் நரேந்திர மோடி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த சலுகைகள்தான் அந்த மாநிலத்தின் கடன் சுமைக்கு அடிப்படை காரணம் ஆகும்!பெருமுதலாளிகளுக்காக மாநிலத்தை கடனாளியாக ஆக்கிய நரேந்திரமோடி பிரதமரானால் அதே பெருமுதலாளிகளுக்காக இந்திய தேசத்தையே அடகு வைத்திட தயங்கமாட்டார். இவர் எப்படி பிரதமருக்கு தகுதியானவராக இருக்க முடியும்? ---- தீக்கதிர்.
No comments:
Post a Comment