Thursday, 17 April 2014

16.04.14 - நமது வெற்றி பாதையில் மீண்டும் ஒரு மைல் கல் .

அருமைத்தோழியர்களே! தோழர்களே!உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் மாவட்டசங்கம் உரித்தாக்குகிறது.
16.04.2014 அன்று நாம் விடுத்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  . . .
நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின்  வெற்றிப்பாதையில் மீண்டும் ஒரு மைல் கல்லாய் அமைந்தது என்றால் அது மிகையாகாது. நமது மாவட்ட சங்கத்தின் அறைகூவலை ஏற்று அலைகடலென, திரண்டு ஒற்றுமை காத்து நமது சங்கத்தின் மாண்பினை பறை சாற்றிய அனைத்து தோழர்களுக்கும்,மாநிலசெயலர்.தோழர்.எஸ்.செல்லப்பாஅவர்களுக்கும்,G.M / DGM(HR) / DGM(F&A) / AGM(HR) ஆகியோருக்கும்  மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த பாராட்டும் .. நன்றிகளும் . . . .உரித்தாகட்டும்....
நமது சங்கத்தின் நிகழ்வுகள் என்று சொன்னால் ---
  *  நடந்து முடிந்த திண்டுக்கல் 7 வது மாவட்டமாநாடு ...
  *  மதுரையில் நடைபெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கான பேரணி  ...
  *  23.03.14 மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழா ....
 *16.04.14அன்று திரண்டிட்ட ஆர்பாட்ட அறைகூவல் ...ஆனாலும் சரி மேலும்,  மேலும் புதிய அத்தியாயத்தை நாம்  படைத்து கொண்டே இருக்கின்றோம். இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறாக அமையும் என்பது திண்ணம்.
16.04.14 இயக்க வெற்றிக்கு சில முக்கிய நிகழ்வுகள்...
  @  பிரச்சனை தீர்விற்காக 07.04.14 & 09.04.14 தேதிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு நமது மாவட்டசங்கம் எழுதிய கடிதம்.
    @     மாநில நிர்வாகத்திற்கு  நமது பிரச்சனை தீர்விற்காக,  நமது மாநில செயலர் தோழர்.எஸ்.செல்லப்பா உடனடியாக எழுதிய கடிதம்.
  @     நமது மாவட்டசங்கத்துடன் , மாவட்டநிர்வகம் நடத்திய 15.04.14 & 16.04.14 சுமூகமான பேச்சுவார்த்தை.
  @  16.04.14 மதுரை G.M அலுவலகத்தில் கூடிய நமது BSNLEU & TNTCWU படையின் பங்கேற்பின் எண்ணிக்கை.
    @  பிரச்சனை தீர்வில் G.M / DGM(Hr) / DGM(F&A) / AGM (Hr) ஆகியோரின் உள்ளார்ந்த, ஈடுபாட்டோடு ஆன பேச்சுவார்த்தை.
தேனி மாவட்டத்திலிருந்து மட்டும் 40-க்கும் மேற்பட்ட தோழர்கள் வேன் மூலமாக 16.04.14 பங்கேற்பு  என்பது பாராட்டுக்குரியது. அதனை விஞ்சியது திண்டுக்கல் மாவட்டம். வழக்கம் போல் CSC/TKM கிளையும் தனது பங்கேற்பை உயர்த்தி இருந்தது. G.M அலுவலககிளையும் தனது பங்கேற்பை கூட்டி இருந்தது.எல்லாவட்டிற்கும் மேலாக ஒப்பந்த ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக வந்திருந்தனர். ஆக மொத்தம் பெண்கள் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் என்பது சிறப்பு அம்சமாகும்.மொத்தத்தில் பல நூறு கண்ட இயக்கமாக 16.04.2014 அமைந்தது.
மதுரை மாவட்ட நிர்வாகம் நமது கோரிக்கைகளின் நியாயம் உணர்ந்து எழுத்து பூர்வமாக நமக்களித்த கடித நகல். . . . 
என்றும் தோழமையுடன்--எஸ். சூரியன்--மாவட்ட செயலர் 

No comments: