அருமைத்தோழர்களே! அனைவருக்கும் வணக்கம் . . .
நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் 06.04.2014 அன்று மாவட்டத் தலைவர் தோழர்.சி .செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடை பெற்றது.
அவசர செயற்குழு,அதுவும் ஞாயிற்று கிழமை,ஆனாலும் ஓரிரு நிர்வாகிகள், கிளைச் செயளர்கள் தவிர ,58 பேர் முழுமையான பங்கேற்பு என்பது, அனை வரையும் ஆச்சரியத்தில் ஆழ்த் தியது.இதுதான் நமது BSNLEU சங்கத் தின் போர்க்குணம் என்பதை தொடர் ந்து பறைசாற்றுகிறது.அது மாவட்ட மாநாடு பங்கேற்ப்பு என்றாலும், அல்லது ஒப்பந்த ஊழியர்களுக்கான பேரணியாக இருந்தாலும் சரி,அல்லது 23.03.2014 முப்பெரும் விழாவாக இருந்தாலும் சரி இதுகாறும் அத்துணை நிகழ்ச்சிகளும் சிறப்பான பங்கேற்பை தந்த நமது கிளச்சங் கங்களின் செயல்பாடு தொடர நமது மாவட்ட சங்கம் மனமார பாராட்டுகிறது.
சென்னை R.G.Bதேர்தலில் BSNLEU+NFTEகூட்டணி வெற்றி . . .
* இடதுசாரிகள் ஒற்றுமைக்கு முன்னதாகவே நமது மாவட்டத்தில் NFTEயோடு நாம் ஒற்றுமையை கட்டியுள்ளது தொடரவேண்டுமென மாவட்ட செயற்குழு வெகுவாக பாராட்டியது.
* RGB தேர்தலில் நமது கூட்டணி சார்பாக 4 தோழர்களின் வெற்றிக்கும், அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் மாவட்ட செயற்குழு பாராட்டுக்களை தெரிவித்தது.
* RGB தேர்தலில் நமது சங்க கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட H.ஸ்ரீராமன்/CBM, அரசன்/DDG, K.பழனிகுமார்/PLN, சிவானத்தம்/DDG ஆகியோரிடம் விளக்கம் கோரி சங்க ரீதியான நடவடிக்கைக்கு செல்வது என செயற்குழு ஒரு மனதாக முடிவு செய்தது.
* RGB தேர்தலில் நமது சங்கம் சார்பாக வெற்றிபெற்ற இரு கிளைச் செயலர்கள் தோழர்கள், T.ஈஸ்வரன், A. குருசாமி செயற்குழு தோழர்கள் அனைவருக்கும் "லட்டு"வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
- 23.03.204 முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டு.
- நமது மாவட்டத்தில் சில DEs,SDEs,மற்றும் மாவட்ட நிர்வாகம் சமீப காலமாக ஊழியர்கள் தீர்வில்,ஒப்பந்த ஊழியர்கள் தீர்வில் கடை பிடிக்கும் தவறான நிலைபாட்டிற்கு எதிராக முதற்கட்டமாக "மாபெரும் ஆர்ப்பாட்டம் "நடத்துவது.
- Dr.அம்பேத்கார் பிறந்த தினத்தை முன்னிட்டு,சமூக பாதுகாப்பு,தேச ஒற்றுமை, பொதுத்துறை பாதுகாப்பு,அந்நிய முதலிடு எதிர்ப்பு, ஆகியவை குறித்து மத்திய,மாநில,மாவட்ட சங்க முடிவின் அடிப் படையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம், வாய்புள்ள சங்கங்களையும் இணைத்துக் கொண்டு நடத்துவது, அந்நிகழ்ச்சியில் நமது ஊழியர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்வது.
- 19.04.2014 அன்று மாநிலந் தழுவிய அளவில் கோவையில் நடை பெறும் கருத்தரங்கத்தில் கலந்து கொள்வது.
ஆகிய முடிவுகளை எட்டிய செயற்குழுவில் மாவட்ட செயலர் தோழர். S.சூரியன் ஆய்படு பொருளின் மீது அறிமுக உரையும்,வந்திருந்தவர்களை வரவேற்றும் உரை நிகழ்த்தினார்.செயற்குழுவில் 25 தோழர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். மாநில துணைத்தலைவர் தோழர் .S.ஜான்போர்ஜியா, நிறைவுரை நிகழ்த்தினார். தோழர்.S.மாயாண்டி நன்றியுரை கூற செயற்குழு இனிதே நிறையுற்றது.
No comments:
Post a Comment