Tuesday, 8 July 2014

ஜூலை 8 - தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு நாள் (1925-2008)

சீரிய சிந்தனையை உருவாக்கியவர்தோழர் பி.ராமச்சந்திரன்

மார்க்சியம் தான் மிக உன்னதமான தத்துவம் என்றும் கம்யூனிசம்தான் மனிதகுலத்திற்கான லட்சியப்பாதை என்றும் உறுதியான முடிவுக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் பி.ராமச்சந்திரன். 1941ம் ஆண்டு தலைமறைவாக செயல் பட்ட கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டபோது அவருக்கு வயது 16. அன்றிலிருந்து கம்யூ னிஸ்ட் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பல்வேறு பொறுப்புக் களை ஏற்று திறம்பட செயலாற்றியவர். தோழர் பி.ராமச்சந்திரன். மாணவப் பருவத்திலேயே நாட் டின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்.
1942ம் ஆண்டு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்தவர், ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண் டவர். சென்னை மாணவர் சங்கத்தின் (எம்எஸ்ஓ) செயலாள ராக தீரமுடன் செயல்பட்டவர். 1946ல் அகில இந்திய மாண வர் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்வீரர். கட்சியில் கிளைச் செயலாளர் பொறுப்பு முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வரை வகித்ததலைவர்.
தத்துவப் போராட்டத்தில், கட்சிக் கல்வியில், இடதுசாரி அரசியலில் சீரிய சிந்தனையை உருவாக்குவதில் இவரது பங்களிப்பு மகத்தானது.உழைக்கும் மக்களின் உயர்வுக்காக பாடுபடும் ஒவ் வொரு தோழருக்கும் ஒரு சிறந்த உதாரணமாக, ஒரு தன் னடக்க கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்த பி.ராமச்சந்திரன் அவர் களின் வாழ்க்கை அனுபவங்கள் சிறந்த வழிகாட்டியாகும்.

No comments: