Thursday, 17 July 2014

ஜூலை 17 : தோழர் P.R..பரமேஸ்வரன் நினைவு நாள் (1932-2000)

தனது குறைந்த பள்ளிப்படிப்புடன் சிறு வயதிலேயே தையல் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர் அருமைத் தோழர்  பி.ஆர்.பி. என அன்புடன் அழைக்கப்படும் தோழர் பி.ஆர். பரமேஸ்வரன். CITU சங்கம், மற்றும் நமது தொலை தொடர்பு  அரங்கம் போன்ற பல்வேறு தொழிற்சங்கங்களுக்குவழிகாட்டியாக விளங்கிய தோழர். PRP கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராகி தனது கடுமையான உழைப்பால் மாநிலக்குழு, செயற்குழு, மத்தியக்குழு உறுப்பினராக உயர்ந்தார். சாதாரண அரசியல் வாழ்விலிருந்து, மார்க்சிய நூல்களைக் கற்றும், கேட்டறிந்தும் படிப்படியாக உயர்ந்து மார்க்சிய சிந்தனையைக் கற்றுக் கொடுக்கும் பேராசிரியராக வளர்ந்தார். சென்னை நகரிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தனது தடத்தை பதிக்க வழி கோலியவர். சென்னை நகரில் மட்டுமின்றி பல மாவட்டங்களுக்கும் பொறுப்பு ஏற்று மகத்தான தொழிலாளி வர்க்கக் கட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடுபட்டவர்.
மக்கள் பிரச்சனைகளில் இதர கட்சிகளைத் திரட்டுவது, தொழிலாளி வர்க்கத்தின் நேச உறவை வளர்ப்பது என்பதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதில் தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் உறுதியாக இருந்தார். கட்சி அமைப்பையும் அரசியலையும், அடிப்படைத் தத்துவத்தையும் இணைத்து செயலாற்றி முத்திரை பதித்தவர் தோழர் பி.ஆர்.பி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விரிவுபடுத்து வதற்கும் பலம் வாய்ந்த அமைப்பாக மாற்றுவதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு தோழர் பி.ஆர்.பி.யின் வாழ்க்கை சிறந்த வழிகாட்டி யாகும். தோழர்.பி.ஆர்.பி நினைவை BSNLEU மதுரை மாவட்டசங்கம் போற்றுகிறது.

No comments: