Sunday 13 July 2014

சிறப்பு வாய்ந்த ...மூன்று கிளைகளின் மாநாடு. . .

அருமைத் தோழர்களே! கடந்த  12.07.14  சனிக்கிழமையன்று  மாலை நமது BSNLEU + TNTCWU உத்தம பாளையம்,மற்றும் கம்பம் ஆகிய  கிளைகிளைகளின்  இணைந்த   மாநாடு  உத்தமபாளையம் தொலை பேசியகத்தில் தோழர்கள் R.சுப்பிரமணியன் / S. பழனிவேல்ராஜன்    கூட்டுத் தலைமையில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக, நமது BSNLEU + TNTCWU சங்க கொடியினை  பணி நிறைவுபெற்ற தோழர்கள்   G.புஷ்பவள்ளி /  V. திருப்பதி இருவரும் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்தனர். அதன்பின் மாநாட்டில் அஞ்சலி உரையை மாவட்டத்துணைத் தலைவர் தோழர்.  T.K. சீனிவாசன்  நிகழ்த்தினார். வரவேற்புரையை தோழர். S. தங்கத்துரை, கிளைச் செயலர் -BSNLEU நிகழ்த்தினார். 



 3 கிளைகளின் இணைந்த மாநாட்டின் துவக்க உரையை தோழர். S. சூரியன்மாவட்டச் செயலர் BSNLEU நிகழ்த்தினார். அதன்பின் நடைபெற்ற ஆய்படுபொருள்களான ஆண்டறிக் கைவரவு-செலவு,  அமைப்பு நிலை,  புதியநிர்வாகிகள்  தேர்வு முறையாக  நடைபெற்றது.
உத்தமபாளையம் கிளைக்கு, தலைவர்,செயலர்,பொருளர் முறையே, தோழர்கள் S.ராஜன், M.பிச்சை முத்து, T.K.சீனிவாசன் ஆகியோரும்,கம்பம் கிளைக்கு தலைவர்,செயலர்,பொருளர் முறையே, தோழர்கள் V.ஜீவானந்தம்,A.அன்புராஜா, N..அரசன் ஆகியோரும்,ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கு, தலைவர்,செயலர்,பொருளர் முறையே தோழர்கள் S.பழனிவேல் ராஜன், S. கண்ணன்,I.சுந்தரமூர்த்தி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.   புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர்கள்  P. தேசிங்கு,, J. மைக்கேல் சிரில் ராஜ் R. ஹரி கிருஷ்ணன், V.சுப்புராயலு, P.சந்திர சேகர், சங்கையா ,R.சுப்புராஜ் ஆகியோர் பேசினர்.
சிறப்புரையை தோழர்கள்,C. செல்வின் சத்தியராஜ் , மாநில அமைப்புச் செயலர்-BSNLEU, N. சோணை முத்து - மாவட்டச் செயலர் - TNTCWU நிகழ்த்தினர்.அதன் பின் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழா G. புஷ்பவள்ளி /  V. திருப்பதி  ஆகியோருக்கு நடை பெற்றது, பணி ஓய்வில் சென்றுள்ள மேற்கண்ட இரு தோழர்களுக்கும் கிளைச் சங்கம் சார்பாக பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டது. அதன் பின் தோழர். S. ராஜன், நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. 
புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாவட்டசங்கம் மனதார வாழ்த்துகிறது.


No comments: