Saturday 12 July 2014

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட 2வது நகரம் தில்லி.


உலக அளவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரங்களில் தில்லிக்கு 2ஆவது இடம் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 2.5 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள தில்லி, இந்த இடத்தை 2030ஆம் ஆண்டுவரை தக்க வைத்துக்கொள்ளும் என்றும், அப்போது அதன் மக்கள் தொகை 3.6 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலில் தற்போது 3.8 கோடி மக்கள்தொகையுடன் ஜப்பானின் டோக்கியோ நகர் முதலிடம் பிடித்துள்ளது.இங்கு மக்கள் தொகை விகிதம் 2030ஆம் ஆண்டில் 3.7 கோடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இந்தப் பட்டியலில் 2.1 கோடி மக்கள்தொகையுடன் மும்பை 6ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய நகரங்களில் மக்கள்தொகை 41 கோடி என்ற அளவில் இருப்பதாகவும், 2050ஆம் ஆண்டில் இந்த அளவு 81.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் நகர மக்கள்தொகையில் இந்தியா மற்றும் சீனாவின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது.

No comments: