இளைய தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணம் . . தோழர்.A.நல்லசிவன் அவர்கள் ஆகும்.
ஒரு சிறந்த கம்யூனிஸ்டுக்குரிய இயல்பான குணங்களினால் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சரியான ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டி வளர்ப்பதில் பெரும் பங்குவகித்தவர் தோழர் ஏ.நல்லசிவன். சட்டமன்ற மேலவையிலும் நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் அவர் பணியாற்றியபோது தமிழகத்தின் பிரச்சனைகளை ஆழ்ந்து கவனித்து அதை மன்றங்களில் எடுத்துரைத்தார்.
வாச்சாத்தி பிரச்சனையை மக்களுடைய கவனத்திற்கு கொண்டுவருவதிலும் அந்த மக்களுக்கு நீதிகிடைக்கவும் அவர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தார். அதே போன்று தமிழில் தந்தி வசதியை கொண்டு வர அவர் எடுத்த சிறப்பான முயற்சிகளை அனைவரும் பாராட்டினர்.கட்சியின் சார்பிலும், தொழிற்சங்கத்தின் சார்பிலும் பல முறை அவர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார். தனது பயண அனுபவங்களை பத்திரிகை களிலும், நூல் வடிவாகவும் வெளியிட்டுள்ளார். கட்சியிலும், தொழிற்சங்கத்திலும் எத்தனையோ பொறுப்புகளை வகித்துவந்த போதிலும் மிகுந்த எளிமையான ஒரு வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து வந்தார்.அவருடைய தன்னடக்கம் அனைத்து கம்யூனிஸ்டுகளும், பொதுநல ஊழியர்களும் பின்பற்றத்தக்கதாகும்.1940-ல் கட்சியில் சேர்ந்த அவர் 1997-ம் ஆண்டில் காலமாகும் வரை 57 ஆண்டுகள் உழைக்கும் மக்களுக்கும், இடதுசாரி இயக்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆற்றியுள்ள அரும்பணிகள் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக என்றென்றும் விளங்கும்.
எளிமையும் வலிமையும் ஒருங்குபெற்ற தலைவர்: மாணவப் பருவத்தில் விடுதலைப் போராட்ட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஸ்டாக பரிணமித்தவர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக பணியாற்றியவர்.சட்டமன்ற மேலவை உறுப்பினராக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றியவர். வாச்சாத்தி மக்களின் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங் களுக்கு தலைமை தாங்கியவர், வழிகாட்டியவர். எளிமையான வாழ்க்கைக்கு சொந்தக்காரர் என்றும் நினைக்கப்படும் வலிமையான தலைவர்.
No comments:
Post a Comment