Wednesday, 9 July 2014

11.07.2014 தர்ணாவை கைவிடக்கோரி CGM அலுவலக கடிதம்...

நமது BSNLEU மாநில சங்கம்  - CGM  பேச்சுவார்த்தை தொடர்ச்சியாய் , மாவட்ட மட்டங்களில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம், ESI/ EPFவழங்குவதில்  காண்ட்ராக்ட்டர்கள் அத்துமீறல் ,மற்றும் தொழிலாளர் நல சட்ட புறக்கணிப்பு , குறித்த நமது சுட்டிக்காட்டல் தொடர்ந்து .... தமிழ் மாநில நிர்வாகம் முந்தைய   BSNL கார்ப்பரேட்   அலுவலக உத்தரவுகளை  தவறாது கடைபிடிக்கவும் , காலத்தே ஊதியம் வழங்கல் ,EPF /ESI  முறைகளில் கூடுதல் கவனம் கடைபிடிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகங்களுக்கு வழிகாட்டு கடிதம் அனுப்பியுள்ளது .மேலும் கூடுதலாக கடந்த BSNL-கார்ப்பரேட்,புதுடெல்லி, அலுவலக உத்தரவுகளை மேற்கண்ட கடிதத்தோடு இணைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது . அத்தோடு நமது BSNLEU தமிழ் மாநில சங்க அறைகூவலுக்கினங்க 2-ம் கட்டமாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்  நடைபெற உள்ள ......
11.07.2014 அன்று நாம் நடத்த இருக்கின்ற தர்ணா போராட்டத்தை கைவிடக் கோரி மாநில நிர்வாகம் வேண்டுகோள் கடிதம் கொடுத்துள்ளதுஎனினும் நமது போராட்ட முடிவில் எந்த மாற்றமும் இல்லை, நமது நியாமான அனைத்துக் கோரிக்கைகளும் தீரும் வரை நமது போராட்டம் தொடரும்   என்பதால் அனைவரும் 11.07.2014 தர்ணாவிற்கு  மதுரையை நோக்கி திரளவேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.  

No comments: