Saturday 12 July 2014

பட்ஜெட்டைக் கண்டித்து14.07.14 இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்.

மத்திய பொது பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் கண்டித்து ஜூலை 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என்று இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி அரசு, 2014-15-ஆம் ஆண்டுக்கான ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை உருவாக்கக் கூடிய பொது பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் தாக்கல் செய்துள்ளது.பெரு நிறுவனங்களின் நலன் சார்ந்த இந்த பட்ஜெட்களில் பாதுகாப்புத் துறை, ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகியவற்றில் நேரடி அந்நிய மூலதனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புகூறு திட்டங்களுக்கான நிதியும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டண உயர்வை, டீசல் விலை உயர்வோடு இணைத்திருப்பதால் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உழைக்கும் மக்களின் வறுமையை அதிகரிக்கும் இந்த மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 14-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அனைத்துப் பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments: