Wednesday 9 July 2014

மகாத்மா காந்திக்கு லண்டன் நாடாளுமன்றத்தில் சிலை...


இந்தியாவின் தேசத் தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் சிலை லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் நிறுவப்படும் என இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் மற்றும் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் ஆகியோர் இந்தியாவில் சுற்று பயணம் செய்து வருகின்ற னர். உலகம் முழுவதும் அகிம்சைகொள்கையை பரவச்செய்த மகாத்மா காந்தியின் கொள்கை யால், ஈர்க்கப்பட்ட அவர்கள் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் காந்திக்கு சிலை அமைக்கும் விருப்பத்தை தெரி வித்திருக்கின்றனர்.
மேலும் காந்தியின் மத நல்லிணக்கம், வகுப்புவாத பிரிவு எதிர்ப்பு, இந்தியாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்ல அவர் வகுத்த பாதைகள்,வன்முறையில் நாட்டமின்மை ஆகியவை இன்றைய சூழலில் உலகநாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கிறது. அவருடைய சிலையை லண்டனில் அமைத்து அவருக்கு நாங்கள் மரியாதை செலுத்த விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர். இருவரும்இன்று (புதன் கிழமை)காந்தி நினைவ கத்தையும் பார்வையிடுகின்றனர்.

No comments: