முல்லைபெரியாறுஅணை யின் நீர்மட்டத்தை 142 அடி யாக உயர்த்தும் பணி தொடங் கியது. அணையில் உள்ள 13 மதகுகள் கீழிறக்கப் பட்டன. பெரியாறு அணையை 142 அடி உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. நீர்மட் டத்தை உயர்த்துவது தொடர் பாக கண்காணிப்பு குழு அமைக்கவும் நீதிமன்றம் உத் தரவிட்டது. அதன்படி மத்திய அரசு சார்பில் குழுவின் தலை வராக மத்திய நீர்வளஆணைய முதன்மை பொறியாளர் நாதன், தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், கேரளா அரசின் சார்பில் நீர்பாசன கூடுதல் செயலாளர் குரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தேக்கடி:குழுவின் தலைவர் நாதன், தமிழக அரசின் பிரதிநிதி சாய் குமார், கேரளா அரசின் பிரதி நிதி குரியன் ஆகியோர் வியாழ னன்று தேக்கடிக்கு வருகை தந்தனர். இக்குழுவினர் முல்லை பெரியாறுஅணை,பேபிஅணை, மதகு பகுதிகளை பார்வையிட் டனர். அவர்கள் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் 13 மதகு பகுதிகளுக்கு சென்று மதகுகள் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப் போது இறுதிக்கட்ட பணியாக அணையின் 13 மதகுகளின் கதவுகளும் கீழிறக்கப்பட்டன. தண்ணீர் 136 அடிக்கு மேல் அதிகரிக்கும்போது உபரிநீர் இந்த மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன. 36 ஆண்டுகளுக்குப் பிறகு 13 மதகுகளின் கதவுகளும் இப் போது கீழிறக்கப்பட்டுள்ள தால், அணையில் இனி 142 அடி வரை தண்ணீரை தேக்க முடியும். இறுதிக்கட்ட பணிக ளை கண்காணிப்புக் குழு பார்வையிட்டது.
கூட்டம்:பின்னர் தேக்கடியில் இரு மாநில அரசு அதிகாரிகளுடன் கண்காணிப்பு குழுவினர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பொ துப்பணித்துறை முதன்மை பொறியாளர் தமிழரசு, பெரியாறு வைகை வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ், காவேரி வேளாண் மை பொறியாளர் சுப்பிரமணி, ஆணைய கண்காணிப்பாளர் மாதவன், கேரளா அரசின் சார்பில் கேரளா அணைகள் பாதுகாப்பு குழு தலைவர் பரமேஸ்வரன் நாயர், நீர்பாசன துறை முதன்மை செயலாளர் லத்திகா, சிறப்பு செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment