Tuesday 29 July 2014

பெரியகுளம் MLA லாசரின் 3 ஆண்டுமக்கள் பணி . . .

பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் .லாசரின் மூன்றாண்டு மக்கள் பணி நூல் வெளியீட்டு விழா தேனியில் ஞாயிறன்று நடைபெற்றது.தேனியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாநிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலா ளர் டி.வெங்கடேசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கமாவட்ட துணைத் தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு வர வேற்புரையாற்றினார். .லாசர் எம்.எல்..வின் மூன்றாண்டு மக்கள் பணிநூலை கட்சியின் முதுபெரும் தலைவர் எஸ்..ரஜாக் வெளியிட்டார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைதலைவர் .சங்கரகுமார், தேனி அல்லிநகரம் கிராம கமிட்டித் தலைவர் வி.என்.கோவிந்தசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டதுணைச் செயலாளர் என்.ரவி முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், வழக்கறிஞர் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், வியாபாரிகள் சங்க செயலாளர் கே.எஸ்.கே.நடே சன், வர்த்தகர்கள் சங்கத்தலைவர்கள் கே.சீனிவாசன், எஸ்.பெருமாள், பெரிய குளம் நகர்நல கமிட்டி பொறுப்பாளர் பி.கே.ஆர்.விஜயகுமார், உணவுப் பொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர் எம்.ஆனந்தவேல், அனைத்துத் துறைஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் தேனி சீருடையான், அரசு ஊழியர்சங்க மாவட்டச் செயலாளர் எம்.சின்னசாமி, வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம், விளையாட்டு கழகத்தலைவர் மகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சுருளிநாதன், கே.தயாளன், பெரியகுளம் தாலுகாசெயலாளர் எம்.ராமச்சந்திரன், சி.சடையாண்டி, எம்.வி.முருகன், வி.மோகன், சுருளிவேல், பி.இளங்கோவன், ஜி.சண்முகம், எஸ்.செல்வம், சு.வெண்மணி, சிபிஐ தலைவர்கள் எஸ்.திருமலை கொழுந்து, வி.பெத்தாட்சி ஆசாத், ராஜ்குமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக .லாசர் எம்.எல்.. ஏற்புரை நிகழ்த்தினார். தேனி தாலுகா செயலாளர் டி.கண்ணன் நன்றி கூறினார்.

No comments: