Tuesday, 8 July 2014

திரிணாமுல் எம்.பி. தபஸ்பாலை நீக்குக! மாதர் சங்கத்தினர் ஆவேசம்...

பெண்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தபஸ் பால் மீது நடவடிக்கை கோரிய பெண்கள் அமைப்புத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தபஸ் பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் குடும்பப் பெண்களைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தவேண்டும் என்கிற முறையில் மிகவும் அருவருக்கத்தக்க விதத்தில் வெறித்தனமாக பேசியதைக் கண்டித்து திங்களன்று நாடாளுமன்றத்தின் முன் அனைத்திந்திய இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தின்போதுசட்டத்தை உடைக்கும் பேர்வழி எப்படி சட்டம் உருவாக்கும் அவையில் அமரலாம்என்றும் கேள்வி எழுப்பினர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜக்மதிசங்வான், துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், ஜனநாயக மாதர் சங்கத் தின் தில்லி மாநில துணைத் தலைவர் மைமூனா முல்லா, இணைச் செய லாளர் கவிதா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாடாளுமன்ற வீதி காவல்நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டார்கள். காவல் நிலையத்தில் இருத்தி வைக்கப்பட்டவர்களை சிபிஎம் மக்களவை உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, மாநிலங்களவை உறுப்பினர் டி.என். ஷீமா மற்றும் ஜர்ன தாஸ் வைத்யா முதலா னோர் சென்று பார்த்து அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரினர்.

No comments: