Sunday 13 July 2014

ஏழையின் வயிற்றில் அடிக்கும் பட்ஜெட்! -- பிரபாத் பட்நாயக்...

1.பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டில் கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உண்மையில்லாதவை.
2. இதன் அடிப்படை நிதிக் கொள்கை என்பது, இந்த நாட்டு ஏழை-எளிய மக்களின் மீது சுமையை ஏற்றி, அந்த பலன்களை இந்த நாட்டில் நல்ல நிலையில் உள்ள செல்வந்தர்களுக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு, உயர்தட்டில் உள்ள நடுத்தர மக்களுக்கு அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.
3. நாட்டின் பொருளாதாரத்தை மிகப் பெருமளவில் தனியார்மயமாக்கலுக்கு உட்படுத்தும் அம்சத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவதுபொது-தனியார் கூட்டுஎன்பதைச் சார்ந்த திட்டமிடல் பரவலாக அனைத்துத் துறைகளிலும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, பொதுத் துறைகளின் பங்கு விற்பனை என்பது மிகப் பெருமளவில் திட்டமிடப்பட்டுள்ளது.
4. தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதுதான் இந்த பட்ஜெட்டின் நோக்கம் என்று தெரியப்படுத்தினாலும், இந்தியப் பொருளாதாரத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற, நெருக்கடியில் தள்ளியுள்ள மந்த நிலையையோ அல்லது பணவீக்கத்தையோ குறைப்பதற்கான எந்த நம்பிக்கையையும் இந்த பட்ஜெட் அளிக்கவில்லை.
--என்று விவரிக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பொருளாதாரத் துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் --- பிரபாத் பட்நாயக்.

No comments: