Thursday, 24 July 2014

இதயம் இருக்கிறதா? நார்வே Dr. ஒபாமாவுக்கு திறந்த மடல்.

காசா மீது அமெரிக்காவின் ஆதரவோடு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்டு ரத்தவெள்ளதில் உயிருக்கு போராடுபவர்களை நார்வே நாட்டை சேர்ந்த மருத்துவர் குழு ஒன்று இரவும் பகலும் பாராமல் முடிந்த அளவு காப்பாற்றி வருகின்றனர். அப்பணியில் தன்னை அப்பணித்திருக்கும் நார்வே மருத்துவர் கில்பர்ட், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.அதன் விபரம் வருமாறு :``ஒபாமா உங்களுக்கு இதயம் ஒன்று இருக்கிறதா? ஒரே ஒரு இரவு-வெறுமனே ஒரே ஒரு இரவு மாத்திரம் காசா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள். அது வரலாற்றை மாற்றிவிடும் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன். மனமிருக்கும் எவரும் காசாவில் ஓர் இரவு இருந்துவிட்டு பாலஸ்தீன மக்களின் படுகொலையை தடுக்க முயற்சிக்காமல் இருக்க மாட்டார். ஆனால் இரக்கமற்ற இதயமற்றவர்கள் காசாவில் மற்றொரு படுகொலைக்கு திட்டமிடுகிறார்கள்.இரவு முழுவதும் இரத்த ஆறு ஓடுகிறது. அவர்கள் தமது மரணத்தின் கூச்சலை இடுவதை என்னால் கேட்க முடிகிறது. உங்களால் முடியுமானதை தயவுசெய்து செய்யும். இதனை தொடர முடியாது’’ என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: