Thursday 24 July 2014

எழுச்சி மிகு GM (Dev.) கிளை மாநாடு . . .

அருமை தோழர்களே! 23.07.2014 புதனன்று மதுரை  லெவல்   IV  பகுதியில்  தோழர் என். செல்வம் தலைமையில் எழுச்சி மிகு GM (Dev.) கிளை மாநாடு  நடை பெற்றது. இம்மாநாட்டில் 30 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
மாநாட்டின் அஞ்சலி உரையை தோழர் T. கண்ணன் ஆற்றிட, தோழர் T.ஈஸ்வரன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். 
மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் சீரிய உரை ஆற்றினார். அதன்பின் முறையாக ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்கு, அமைப்பு நிலை, புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய  ஆயப்படு பொருள்  அனைத்தும்  நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா , சி. செல்வின்  சத்தியராஜ் ஆகிய இருவரும் உரை நிகழ்த்தினர்.  வந்திருந்த மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஆர். ரவிச்சந்திரன், எ . நெடுஞ்செழியன், எஸ். மனுவேல் பால்ராஜ், ஆர். சண்முகவேல், எஸ். மாயாண்டி, என். சோணைமுத்து  ஆகிய அனைவருக்கும் கிளையின் சார்பாகபொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. 
கிளை மாநாட்டில் முறையே தலைவர், செயலர், பொருளர் ஆகிய பதவிகளுக்கு தோழர்கள் T.ஈஸ்வரன், T. கண்ணன், P. பரமசிவம் ஆகியோருடன் 15 நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்க பட்டது. 
இறுதியாக தோழர் பரமசிவம் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவுற்றது. 
புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.
என்றும் தோழமையுடன் . . .      எஸ். சூரியன், மாவட்ட செயலர் 









1 comment:

Unknown said...

THANKS.... THANKS.... THANKS....