1930 களில்
கோவை பஞ்சாலை தொழிற்சங்க இயக்கத்தின்
செங்கொடி இயக்கத்தின் புதல்வராக மலர்ந்தவர் தோழர் கே.ரமணி.
எவ்வளவு இடையூறு எவ்வளவு பெரிய
அளவில் வந்தாலும் கலங்காமல் உறுதியுடன் கடமையாற்றும் வல்லமை படைத்தவர். தமிழக
தொழிற்சங்க இயக்க முன்னோடிகள் வ.உ.சிதம்பரனார், ஜீவா,பி.ராமமூர்த்தி போன்றோரின்
வழிகாட்டுதலில் போராட்டங்கள் முன்னெடுத்து சென்றவர். தேச விடுதலைப் போராட்டத்தில்
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களையும், விடுதலைக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின்
அடக்குமுறைகளையும் எதிர்த்து செங்கொடி இயக்கத்தை கட்டிக்காத்த தீரர். ஏழு ஆண்டு
காலம் கடும் சிறை வாழ்க்கை.
மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையை
சந்தித்த போராளி. பஞ்சாலை, மின்சாரம்.தேயிலை தோட்ட தொழிற்
சங்கங்களை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். 1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினர்.
1977 முதல்
1991 வரையில் தொடர்ந்து நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் பிரதிநிதியாக தொழிலாளி வர்க்க உரிமைகளை உறுதியோடு முன்வைத்தவர். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் தோழர் கே.ரமணி 2006 மே 30
அன்று தனது 90வது வயதில் காலமானார்.அறுபதாண்டு காலத்திற்கு மேலான பொதுவாழ்க்கையில் எளிமை, தத்துவத்தின் மீதான பற்று கொள்கையில் உறுதி கொண்டு போராட்டக் களத்தில் தளபதியாய், ஓய்வறியா உழைப்பாளியாய் திகழ்ந்தவர்.
1 comment:
தோழா...
சுதந்திரத்துக்கு முன் பசுத்தோல் போர்த்திய புலி...................................
சுதந்திரத்துக்குப் பின் பாய்ந்த காங்கிரஸ் தான் போலும்... இது தெரியாம போச்சேன்னு நினைக்கும்போது குமட்டுது.
எண்ணங்களின் தேரோட்டதில்...
இராம.அய்யனார்சாமி
Post a Comment