தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பொதுத்துறையை பாதுகாக்கப்போராடி வரும் BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக 6வது முறை அமோக வெற்றிபெற்றுள்ளது.மே 10ஆம் தேதி நடைபெற்ற 7ஆவது BSNL சங்க அங்கீகாரத் தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த தேர்தலில் BSNL ஊழியர் சங்கம் 81195 வாக்குகளை பெற்றது. NFTE சங்கம் 52367 வாக்குகளை பெற்றது. மொத்தமுள்ள 35 மாநிலங்களில் 27 மாநிலங்களில் BSNL ஊழியர் சங்கம் முதலிடத்தை பெற்றுள்ளது. NFTE சங்கம் 7 மாநிலங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.சென்னையில் BSNL ஊழியர் சங்கம் 2209 வாக்குகளையும், NFTE சங்கம் 2532 பெற்றுள்ளது. சென்னை தவிர பாண்டிச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் 4972 வாக்குகளையும், NFTE சங்கம் 5584 வாக்குகளையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 18 SSAக் களில் BSNL ஊழியர் சங்கம் 10 SSA-க்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த வெற்றி சாதாரணமானதல்ல! இது இரட்டை ஹாட்ரிக் வெற்றி. தொடர்ச்சியான 6ஆவது வெற்றி. இந்திய பொதுத்துறை வரலாற்றிலேயே நடைபெற்றுள்ள ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் இது போன்ற வெற்றியை எந்தசங்கமும் பெற்றதில்லை.BSNL ஊழியர் சங்கம் அங்கீகாரம் பெற்ற இந்த 12 ஆண்டுகளில் BSNL நிறுவனத்தை பாதுகாக்கவும், BSNL ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் எடுத்த முயற்சிகளுக்கு இந்திய நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் கொடுத்ததுள்ள அங்கீகாரம் தான் இது. இந்த அங்கீகாரத்தை பயன்படுத்தி வர உள்ள புதிய ஊதிய மாற்றத்தில் ஊழியர்களுக்கு நல்லதொரு ஊதிய மாற்றத்தையும், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான PLI பெற்றுத் தருவதற்குமான போராட்டங்களில் வெற்றி பெறுவோம். 1991 முதல் புதிய பொருளாதாரக் கொள்கையினை எதிர்த்து இந்தியாவில் நடைபெற்ற அனைத்து பொது வேலை நிறுத்தங்களிலும் கலந்துக் கொண்ட ஒரே சங்கம் BSNL ஊழியர் சங்கம் மட்டுமே. மத்திய அரசாங்கங்களின் தவறான பொதுத்துறை விரோதக்கொள்கையினை எதிர்த்து போராடி BSNLநிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே நிலைநிறுத்திட தொடர்ந்து போராடுவோம்.இந்த தகவலைBSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ். செல்லப்பா, தமிழ்மாநில செயலாளர் ஏ. பாபுராதாகிருஷ்ணன், சென்னை தொலைபேசி மாநில செயலாளர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்....தீக்கதிர்.
No comments:
Post a Comment