அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் பூத் கமிட்டி கூட்டம் 07-05-16 அன்று, சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் சி . செல்வின் சத்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. இதுகாறும் நடந்துள்ள பணிகள் குறித்தும், இனிசெய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் விளக்கி உரை நிகழ்த்தினார். SEWA சங்க மாவட்ட செயலர், தோழர் எஸ். கந்தசாமி NFTE சங்கம் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து செய்துவரும் துரோகத்தை அம்பலப்படுத்தியதோடு, அனைத்து ஊழியர்களும் BSNLEU கூட்டணி சங்க சின்னமான செல்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கி பேசினார். பூத் வாரியாக பூத் கமிட்டி தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். மாநில சங்க துணைத்தலைவர் தோழர் .எஸ். ஜான் போர்ஜியா தனது கருத்தையும் பதிவு செய்தார். இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற, தொடர்ந்து வெற்றியை மதுரை மாவட்ட சங்கம் பெரும் என்ற சூளுரையோடு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment