Friday, 27 September 2013

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக . . .

 ‘2ஜி ஸ்பெக்ட்ரம்முறைகேடு குறித்து விசாரித்து வரும், பார்லிமென்ட் கூட்டுக்குழு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இன்று மீண்டும் கூடுகிறது. இதில், பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றமற்றவர் எனவும், தி.மு.., முன்னாள் அமைச்சர், .ராஜாவை குற்றவாளி போல சித்தரிக்கும் வரைவு அறிக்கை நிறைவேற்றப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக, தி.மு..,வைச் சேர்ந்த, .ராஜா இருந்த போது, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, ‘2ஜி ஸ்பெக்ட்ரம்ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த ராஜா மற்றும் பலர், பல மாத சிறைவாசத்திற்குப் பிறகு, ஜாமினில் வெளியே வந்துள்ளனர். இது குறித்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், 30 எம்.பி.,க்களைக் கொண்ட, பார்லிமென்ட் கூட்டுக்குழுவும் (ஜே.பி.சி.,) விசாரித்து வருகிறது. காங்கிரஸ், பா.., கம்யூனிஸ்ட், .தி.மு.., பிஜு ஜனதாதளம், தி.மு.., போன்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த குழுவுக்கு தலைவராக, காங்கிரஸ் கட்சியின் எம்.பி., – பி.சி.சாக்கோ உள்ளார். துவக்கம் முதலே, பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் அமைச்சர்களையும் காப்பாற்ற முயற்சிக்கும் சாக்கோ, கூட்டுக்குழுவின் வரைவு தீர்மானத்தை தயாரித்துள்ளார். அதில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் காப்பாற்றியுள்ளதாகவும், ராஜா மீது குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இன்று கூடும், பார்லிமென்ட் கூட்டுக்குழுவில், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம்  ஊழல் தொடர்பாக  நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற உள்ளது.குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான தோழர். சீத்தாரம் எச்சூரி,கூட்டுக்குழுவின் தலைவர் பி .சி.சாக்கோவிடம் தனது அத்ருப்தியை தெரிவித்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்,மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டவர்களை கூட்டுக்குழு விசாரிக்கவில்லை என்றும்,அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனையுடன் கூட்டுக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்படவில்லை என்றும் தோழர். சீத்தாரம் எச்சூரி கூறியுள்ளார்.     

No comments: