Tuesday 24 September 2013

வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி 43 லட்சம் ஏமாற்றிய . . .

வேலை வாங்கித்தருகிறேன் என்று கூறி 43 இலட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றிய போலி ஐஏஎஸ் ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருச்சூ ரைச் சேர்ந்தவர் ஸ்ரீதரமேனன். இவரது மகன் மதுகணேஷ்(34). இவர் தில்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்தில் ஐஏ எஸ் அதிகாரியாக பணிபுரிவ தாகக் கூறி கடந்த சில மாதங் களுக்கு முன்பு சைரன் வைத்த காரில் மதுரையில் உள்ள ஒரு ஸ்டார் விடுதியில் தங்கியுள் ளார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த நாராயணன், ஜெய் ஹிந்த்புரத்தைச் சேர்ந்த செல்வ ராஜ், பங்கஜம் காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகி யோர் தொடர்பு கொண்டுள்ள னர். நாராயணனின் மகளுக்கு கடந்த 2011-2012 ஆம் ஆண்டுக் கான எம்பிபிஎஸ் சீட்டு வாங் கித்தருவதாகக் கூறி மது கணேஷ் 43 இலட்ச ரூபாயை வாங்கியுள்ளார். கல்லூரிக்கான இடத்தையும் பெற்றுத்தராமல், பணத்தையும் பெற்றுத்தராமல் மதுகணேஷ் இழுத்தடித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன், செல்வராஜ்,சுரேஷ்குமார் ஆகி யோர் திருச்சூருக்குச் சென்று பணத்தைக் கேட்டுள்ளனர். அப்போது மதுகணேஷின் தந்தை ஸ்ரீதரமேனன் துப்பாக்கி யைக் காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சூர் சென்ற மதுரை காவல்துறை யினர் ஸ்ரீதரமேனனை கைது செய்து அவரிடமிருந்த துப் பாக்கி, போலி ஐஏஎஸ் அடை யாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மது கணேஷ் அங்கிருந்து தப்பி யோடி விட்டார். அவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அவரது செல்போ னை வைத்து தில்லியில் இருப்ப தாக காவல்துறைக்குத் தெரிய வந்தது. மதுரை மாவட்ட குற் றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர் தினகரன் தலைமையிலான காவல்துறையினர் தில்லி சென்று மது கணேஷை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்தனர்.

No comments: