Wednesday 4 September 2013

20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி
என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் 4219 பேர் ஒரே நாளில் பணிநிரந்தரம் ஆகியு ள்ளனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் உள்ளது. இங்கு சுமார் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் உண்ணாவிரதம், ரயில் மறியல், மாவட்டம் தழுவிய போராட்டங்கள் நடத்தினர்.இதுதொடர்பாக டெல்லியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.அதில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்ப்பது, என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வசதி, ஊதிய உயர்வு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. அதன்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ அடையாள அட்டையும், ஊதிய உயர்வும் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால் சொசைட்டியில் சேர்ப்பது மட்டும் இழுபறியில் இருந்தது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கே காரணம் என கூறப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இப்பிரச்சனையில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒப்பந்த தொழிலாளர்களை சொசைட்டியில் சேர்க்க என்எல்சி முடிவு செய்தது. பின்னர் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 4,219 ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்க்க என்எல்சி நிர்வாகம் உத்தரவிட்டது.நேற்று முன்தினம் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து சொசைட்டி உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் படிப்படியாக என்எல்சியில் நிரந்தர தொழிலாளர்களாக ஆக்கப்படுவர். கடந்த 20 ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்றனர். 4219 ஒப்பந்த தொழிலாளர்கள்  ஒரே நாளில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments: