Saturday, 14 September 2013

ஒரே நம்பிக்கை நட்சத்திரம் . . .

இந்திய அரசியல் மேல் நம்பிக்கை வைப் பதற்கு ஒரே ஒரு காரணம் சொல்லுங்களேன்...!
திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க் கார்தான் நாட்டின் மிகவும் ஏழையான முதலமைச்சர். இவருடைய வங்கி இருப்பு 6,500 ரூபாய் மட்டுமே. சொந்த வீடு கிடையாது. இவரது மனைவி சைக்கிள் ரிக்ஷாவில்தான் பயணிக்கிறார். மாணிக், தன்னு டைய முதலமைச்சர் சம்பளத்தை அப்படியே கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, அவர்கள் தரும் மாதம் 5,000 ரூபாயில் தான் குடும் பம் நடத்துகிறார். இவரின் நேர்மை, எளிமை காரணமாக, தொடர்ந்து நான்காவது முறையாக திரிபுரா வின் முதல்வராகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர் களும் பாராட்டும் இவரது நேர்மை மீது நம்பிக்கை வையுங்கள்.!

- நன்றி - ஆனந்த விகடன்

No comments: