சூரிய மின்சார ஊழலில் சிக்கியுள்ள கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டிக்கு கருப்புக் கொடி காட்டிய இடது ஜனநாயக முன்னணி ஊழியர்கள் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தைச் சேர்ந்த ஜெயபிரசாத் என்ற ஊழியரின் உயிர்நிலையில் லத்திக் கம்பால் குத்தியுள்ளனர். படுகாயமடைந்த ஜெய பிரசாத் மருத்துவமனை யில் உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கிறார்.
கைரளி பீப்பிள் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான இந்தக் கொடூரக் காட்சியைப் பார்த்து கேரளமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. புதனன்று முதலமைச்சர் உம்மன்சாண்டி, திரு வனந்தபுரத்தில் மாவட்டக் கொள்முதல் மையத்தை திறந்து வைக்க வந்திருந்த போது அவருக்கு இடது ஜனநாயக முன்னணி ஊழியர்கள் கருப்புக்கொடி காட்டினர். அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கொடூரத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டனர். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயபிரசாத் என்ற ஊழியரை காவல்துறையினர் சுற்றிவளைத்துத் தாக்கினர். குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று அடித்தனர்.
தும்பா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சி.விஜயதாஸ், ஜெயபிரசாத்தின் உயிர்நிலையில் தடியால் பலமுறை அடித்தார். லத்திக் கம்பால் குத்தவும் செய்தார். அப்போது நகர காவல் ஆணையர் பி.விஜயன் உள்ளிட்ட அதிகாரிகள் அருகில் இருந்தனர். காவல்துறை தாக்குதலில் கீழே விழுந்த ஜெயபிரசாத்தை பூட்ஸ் காலாலும் உதைத்தனர். கருப்புக் கொடி காட்டிய இடது ஜனநாயக முன்னணி ஊழியர்களை காவல் துறையினர் பேருந்தில் ஏற்றிச் சென்றனர். ஆனால் பேருந்தில் ஜெயபிரசாத் இல்லை. இதை தொடர்ந்து தலைவர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர்.
சாலையில் அமர்ந்து முற்றுகைப் போரா ட்டம் நடத்தினர்.
ஜெயபிரசாத்தை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதை அறிந்த தலைவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் .தீக்கதிர்.
No comments:
Post a Comment