வறுமையின்
கோரப்
பிடியில்
சிக்கிய,
பளுதூக்கும்
வீராங்கனை,
வேலை
வாய்ப்பு
கேட்டு
போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளார்.உத்தர பிரதேசம் மாநிலம், பரேலியில் வசிப்பவர், மீனாட்சி. 1999ல், நடந்த ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில், பளுதூக்கும் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றார். பின், 2007 முதல், 2009 வரை, பெரோசாபாத்தி“ல், பளுதூக்கும் வீரர்களுக்கான
பயிற்சியாளராக
நியமிக்கப்பட்டார்.
மாநில
அளவில்
நடந்த
போட்டிகளில்,
50க்கும்
மேற்பட்ட
பதக்கங்களை
வென்றார்.
இவர்
கணவர்,
தீபக்
சைனி.
இவரும்
பளுதூக்கும்
வீரராகவும்,
உத்தர
பிரதேச
பளுதூக்கும்
குழுவின்
பயிற்சியாளராகவும்
இருந்தார்.
இவர்களுக்கு,
இரு
குழந்தைகள்
உள்ளனர்.
புரண்டவாழ்க்கை :
கடந்த, 2011ல் நடந்த ஒரு சாலை விபத்தில், தீபக் இறந்து விட்டார்; மீனாட்சி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையி“ல் அனுமதிக்கப்பட்ட அவருடைய காலில், ஸ்டீல் கட்டை பொருத்தப்பட்டது.இவருடைய மருத்துவ சிகிச்சைக்கு, மாநில அரசு எந்த உதவியும் செய்யாத நிலையில், இருந்த ஒரு வீட்டையும் விற்று, அவரது குடும்பத்தினர் சிகிச்சையளித்தனர்.கணவர் இறந்ததாலும், காலில் கட்டை பொருத்தப்பட்டதாலும், பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியையும் அவர் இழந்தார்; பயிற்சியாளர் பணிக்கும் தகுதி இழந்தார்.

போராட்டம்:
அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி, வேலை வாய்ப்பு அளிக்கும்படி, உத்தரபிரதேச மாநில விளையாட்டுத் துறையிடமும், மாநில அரசிடமும், பலமுறை மனு கொடுத்தும், பலனில்லை. குடும்பத்தின் வறுமை நிலையும், இரு குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக் குறியான நிலையில், கடந்தவெள்ளிக்கிழமை,சட்டசபைஎதிரில், தன்இருகுழந்தைகளுடன்போராட்டத்தில்ஈடுபட்டார்.இதுகுறித்து, மீனாட்சி கூறியதாவது:விபத்திற்குப் பின், என் குடும்பத்திற்கு, என்னுடைய சகோதரி இதுநாள் வரை உதவிகள் செய்து வருகிறார். எத்தனை காலம் அவரால் உதவி செய்ய முடியும்... மாநில அரசு எனக்கு வேலை வாய்ப்பு அளித்தால், உதவியாக இருக்கும் என்பதால், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு, மீனாட்சி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment