முக்கிய பொதுச் சேவைகளுக்கு கூட ஆதார் அடையாள அட்டை
கட்டாயம் என மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அத்தியாவசிய அரசு சேவைகளை பெறுவதற்கு
ஆதார் அட்டை கட்டாயமல்ல என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி
கே.எஸ். புட்டாசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,
"ஆதார் அட்டை திட்டம், மக்கள் தாமாகவே முன்வந்து
தங்களைப்பற்றிய விவரங்களை பதிவு செய்யும் திட்டம் என அரசு கூறினாலும், திருமணப்பதிவு
உள்ளிட்ட இதர சேவைகளுக்கு மாநில அரசுகள் ஆதார் அட்டையை கட்டாயமாக கோருகின்றன. மகாராஷ்ட்ரா
அரசு கூட சமீபத்தில் ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்களின் திருமணம் பதிவு செய்யப்படாது
என அறிவித்துள்ளது.
இது அரசியல் சாசனத்தின் 14 ஆவது பிரிவு ( சம உரிமை)
மற்றும் 21 ஆவது பிரிவு ( சுதந்திர வாழ்க்கைக்கான உரிமை) களுக்கு எதிரானது. எனவே ஆதார்
அட்டை திட்டத்திற்கு தடை வேண்டும்" என கூறப்பட்டிருந்தது
No comments:
Post a Comment