Friday, 20 September 2013

அமெரிக்காவில் சுமார் 4.60 கோடி மக்கள் வறுமையில் . . .

அமெரிக்காவின் பொருளாதார நிலை கடந்த 2009-ம் ஆண்டு முதல் தேக்க நிலையில் உள்ளது. நடுத்தர மற்றும் ஏழை அமெரிக்கர்களுக்கு வருமானம் குறைந்து வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள். குறிப்பாக அதிகம் படித்த அமெரிக்கர்ளுக்கு இழப்பு அதிகமாக உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு நடுத்தர அமெரிக்கரின் வருமானம் ஆண்டிற்கு 56,080 டாலராக இருந்தது.
பின்னர் பணவீக்கம் 9 சதவிகிதம் அதிகமானதால் 2012-ம் ஆண்டு நடுத்தர அமெரிக்கரின் வருமானம் ஆண்டிற்கு 51,017 டாலராக குறைந்து விட்டது. பணவீக்கத்தை குறைக்க அமெரிக்க அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலன் அளிக்கவில்லை. இதனால் வருமானம் குறைந்து அமெரிக்கர்கள் திண்டாடி வருகிறார்கள். மேலும் அரசின் பொருளாதார சீர்திருத்தமும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை சென்றடையவில்லை. இதனால் அமெரிக்காவில் சுமார் 4.60 கோடி மக்கள் வறுமையில் வாழ்வதாக அதிகாரபூர்வ புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதே நேரத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் 5 சதவிகித அமெரிக்கர்கள் மட்டும் ஆண்டுக்கு 1,91,000 டாலர் வருவாய் பெற்றார்கள். இப்போது அவர்களின் வருமானமும் குறைந்து விட்டதாக புள்ளி விவரம் கூறுகிறது.அமெரிக்காவில் கடந்த 1928-ம் ஆண்டு முதல் 2012 வரை பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி ஒரு சதவிதமாக இருந்தது. ஆனால் 2012-ம் ஆண்டு இந்த இடைவெளி 10 சதவிகிதமாக உயர்ந்து விட்டது.இப்போது அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 7.3 சதவிகிதமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள், ஆனால் பொருளாதார நிபுணர்கள் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 20 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: