Saturday, 14 September 2013

நாள் ஒன்றிற்கு 87 கோடி பேர் உணவின்றி பட்டினியால் . . .


உலகில் 87 கோடி மக்கள் தினமும் பசியால் கஷ்டப்படுவதாகவும், உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் 3ல் 1 பங்கு வீணாகி வருவதாகவும் .நா. தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தங்கள் நாடுகளில் கடுமையான நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டு ஒன்றிற்கு 130 கோடி டன் உணவுப்பொருட்கள் வீணாக அழிக்கப்படுகிறது என்று .நா சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் கடல்சார்ந்த உணவுப்பொருட்கள் வீணாகுவது பற்றிய தகவல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை. மேலும் இந்த ஆய்வில் நாள் ஒன்றிற்கு 87 கோடி பேர் உணவின்றி பட்டினியால் வாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் 55 ஆயிரம் கோடி மதிப்பிலான உணவுப்பொருட்கள் வீணாகுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மொத்த பரப்பில் 28 சதவிகித அளவிற்கு உணவுப் பொருட்கள் பயிரிடப்படுகின்றன.
அந்த உணவுப்பொருட்களில் வளர்ந்த நாடுகளில் பெருமளவு உணவுப்பொருட்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் சாப்பிடாமலும் வீணடிக்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் அதிகமாக விளையும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுப்பொருட்கள் போதிய குளிர்சாதன வசதியும், பதப்படுத்தப்பட்டு சேமிக்கும் வசிதியுள்ள கிடங்குகள் இல்லாமலும் வீணடிக்கப்படுகின்றன. சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உணவுப்பொருட்கள் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றன. அதே வேளையில் ஆசிய ஜரோப்பிய நாடுகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணங்களால் வீணடிக்கப் படுகின்றது என்று .நா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது

No comments: