மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது
இனவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலாவிற்கு மனித நேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.தென்ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் விடுதலை செய்யப்பட்டார். கறுப்பின மக் களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தந்த அவர் தென்ஆப்பிரிக்காவின் திபரானார்.இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு 95 வயதான மண்டேலா உடல் நலக்குறைபாட்டால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய மண்டேலா ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார்.இந்நிலையில் உலகில் உள்ள தென்பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றம் வளர்ச்சிக்காக போராடிய நெல்சன் மண்டேலாவிற்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலாவின் சார்பில் அவரது மகள்கள் ஜோசினா மாசெல், ஜின்ட்ஜிமண்டேலா ஆகியோர் இந்த விருதை பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment