மேற்கு வங்க முதல்வர் திருவாளர் மம்தா பானர்ஜி., தனது
உண்மையான முகத்தை வெளிக்காட்டி உள்ளார். அவர் வேலைநிறுத்தங்களை மேற்கு வங்கத்தில் நடக்க
அனுமதிக்க மாட்டேன் என்று, நேற்று அறிவித்தார்.
அவர் வேலை நிறுத்தங்கள் மற்றும், பந்த் போன்றவை அழிவு நடவடிக்கைகள் என்று முத்திரை பதித்துள்ளார். மேலும், அவர் எந்த மனிதனும் வேலைநிறுத்தம் போன்ற நடவடிக்கைகள் காரணமாக தனது ஆட்சி
காலத்தில்; முந்தைய
இடது முன்னணி அரசாங்கம் இருந்த போது,
74 லட்சம் மனித உழைப்பு நாட்கள்,
வேலை நிறுத்தங்கள் மற்றும், பந்த் காரணமாக இழந்துள்ளது என்று
புள்ளி விபரம் கொடுத்துள்ளார். வேலைநிறுத்தங்கள்
தடை செய்யப்பட வேண்டும் என்பது, இந்த நாட்டின்
முதலாளிகளின் நீண்ட கால ஆசை, தேவை
என்பது நமக்கு தெரியும். திருவாளர் மம்தாபானர்ஜி அவர்களின் அறிவிப்பு இந்திய முதலாளிகளின்
நீண்டகால விருப்பத்தை
பூர்த்தி செய்வது ஆகிறது. மேற்கு
வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததற்கு பின்னால் திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களால், நூற்றுக்கணக்கான நமது தோழர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்
இதில் மேற்கு வங்கம், தொழிலாளவர்க்க இயக்க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை தாக்குதலை திரிண முல் காங்கிரஸ் தொடங்கியது. இப்போது திருவாளர் மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது, ஒரு க்ளைமாக்ஸ் ஆகும் இப்போது அவர் வேலைநிறுத்தங்கள் அனுமதிக்க
முடியாது என்று அறிவித்துள்ளார். நாம்
திருவாளர் மம்தாபானர்ஜி அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல
விரும்புகிறோம், வேலைநிறுத்தம் செய்யும் உரிமை, தொழிலாள வர்க்கம் போராடி பெற்ற உரிமைஎன்பது திருவாளர் மம்தாபானர்ஜி போன்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தொழிலாளர் வர்க்கம் உரிய முறையில் பாடம் புகட்டும்.
.....BSNLEU - CHQ
No comments:
Post a Comment