Sunday, 22 September 2013

முத்தான 30 அம்ச கோரிக்கை விளக்க கூட்டம்

தோழர்களே! 
எதிர்வரும் 27.09.2013 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட திண்டுக்கல் ரெவென்யூ மாவட்டத்தில் பகுதி கூட்டம் 21.09.13 அன்று மாலை மிகவும் சக்தியாக நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் வி.வெங்கட்ராமன் அனைத்து கோரிக்கிகளையும் விளக்கி மிகச் சிறப்பாக பேசினார். நமது கோரிக்கையின் நியாயம் குறித்தும், போராட்டத்தை சக்தியாக நடத்துவது குறித்தும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தோழர் வி.வெங்கட்ராமன் உரை அமைந்தது. அதன்பின் மாநில அமைப்பு செயலர் அமைப்புச் செயலர் தோழர் சி. செல்வின் சத்யராஜ்  நமது மாவட்டத்தில் போராடுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென உரையாற்றினார்.
போராட்ட விளக்கக் கூட்டத்தில் தோழர் வி. வெங்கட்ராமன் மா.து.தலைவர்
திண்டுக்கல் கூட்டத்தில் தோழர் எஸ். சூரியன்

விளக்கக் கூட்டத்தில் தோழர் சி. செல்வின் சத்யராஜ்   மா. அ .செயலர்

கூட்டத்தில் பார்வையாளர்களின் ஒரு பகுதி
இறுதியாக மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் நமது மாவட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற வேண்டுகோளோடு, 30 அம்ச கோரிக்கை குறித்து ஊழியர்களிடம் one to one என்ற முறையில் பிரச்சாரத்தை விரிவாக எடுத்து சென்று போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டார்.

No comments: