தேர்தலை கவர , 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்,ஆட்சி்யை கைப்பற்ற காங்கிரஸ்அரசின் முயற்சி
தற்போதைய காங்கிரஸ்அரசின் பதவி காலம் வரும் 2014-ம் ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நிலக்கரிசுரங்க ஊழல் வழக்கு என பல்வேறு பிரச்னைகள் காரணமாக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியுமா என்ற அச்ச நிலையி்ல் காங்கிரஸ்உள்ளது. இதனையடுத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிரடியாக ரூ 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இலவச பொருட்கள் வழங்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இலவச மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு ஒன்றிற்கு ரூ.360 மதிப்பு கொண்ட ரீசார்ஜ் உடன், 30 நிமிடம் டாக்டைம், 30 இலவச எஸ்.எம்.எஸ்., 30 நிமிடம் இண்டர் நெட் பயன்பாட்டுடன் கூடிய வகையில் இலவச மொபைல் போன்களை வழங்க முடி வு செய்துள்ளது. இதற்காக 4 ஆயிரத்து850கோடிரூபாய்செலவாகும்எனமதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ( 2 ஆயிரத்து 983 கோடி ரூபாய் செலவி்ல் 60 சதவீத ஊரகப்பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஆயிரத்து 989 கோடி செலவி்ல் 40 சதவீத கிராம புற மாணவர்கள் பயன்படத்தக்க வகையி்ல) கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் அரசு திட்டமிட்டு்ள்ளது. இத்திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான சாத்தியக்கூறுகைளை மத்திய அமைச்சரவைக்குழு தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
. . . .தினமலர்
No comments:
Post a Comment