Friday, 13 September 2013

BSNL/MTNL நிறுவனங்கள் லாபம் நோக்கி செல்ல முடியும் . . .

மந்திரிகள் குழு முடிவுகள்  .  .  .
12/09/2013 அன்று BSNL/MTNL மறுசீரமைப்புக்காக கூடிய மந்திரிகள் குழு முடிவுகள்.

Ø  BWA (Broadband Wireless Access) அலைக்கற்றை கட்டணமாக  BSNL/MTNL நிறுவனங்கள் செலுத்திய 11,000 கோடி தொகையைத்திருப்பி அளிப்பது.
இதில் BSNLன் பங்கு 6725 கோடியாகும்
MTNL செலுத்தியது 5700 கோடியாகும்.

Ø  MTNL ஊழியர்களுக்கு ஒய்வூதியம் அளிப்பது.   இதற்கான ஆண்டு ஓய்வூதியச்செலவு  570 கோடியாகும். இதில் 170 கோடியை MTNL செலுத்தும். மீதியை அரசே ஏற்றுக்கொள்ளும்

மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்ற பின்பு மேற்கண்டவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும்,  மேலே கண்ட முடிவுகள் மூலம் BSNL/MTNL நிறுவனங்கள் லாபம் நோக்கி செல்ல முடியும் எனவும்  இலாக்கா அமைச்சர் கூறியுள்ளார்

மேற்கண்ட  பிரச்சினைகள் தவிர 
Ø  விருப்ப ஓய்வு, BSNL/MTNL வளர்ச்சிக்கான கருவிகள் வாங்குதல், அரசுத்துறைகள்  BSNL/MTNL சேவையை பயன்படுத்துதல்
DOT சொத்துக்களை BSNLக்கு மாற்றுதல் 
போன்ற  முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை



No comments: