Wednesday 4 September 2013

புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்த ஆர்ப்பாட்டம் . . .

மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2011 செப்டம்பர் 2ம் தேதி திங்களன்று மக்களவையில் முதல் மசோதாவாக பட்டியலிடப்பட்டுள்ளது. இம்மசோதா அன்றைய தினமே நிறைவேறக்கூடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா எச்சரித்துள்ளார்.
அன்றைய தினம் வேறு பிரச்சனைக்குரிய அலுவல்கள் இல்லாததாலும் பாஜகவும் காங்கிரசும் இதில் ஒத்த கருத்துடன் இருப்பதாலும் அன்றே நிறைவேற்றும்மத்தியஅரசின் இம்  முயற்ச்சியை அனைத்து தொழிலாளர் சங்கமும்  எதிர்ப்பது.இம்மசோதாவுக்கு எதிராக நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போராடிப் பெற்ற ஓய்வூதிய உரிமையை ஒழித்துக் கட்டும் இந்த மசோதா நிறைவேறினால் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், 2ம் தேதியோ மறுநாளோ 2 மணி நேர வெளிநடப்பு செய்திட திட்டமிட்டுள்ளனர்.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் (டிஆர்இயு) அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பும் 2ம் தேதியே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.ஓய்வூதியப் பறிப்புக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட சிஐடியு தமிழ் மாநிலக் குழு திட்டமிட்டுள்ளது.
இதனை ஒட்டி மதுரை நகரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக நடை பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நமது BSNLEU + TNTCWU சார்பாக நமது மாநில அமைப்புசெயலர் தோழர் .சி .செல்வின் சத்தியராஜ் ,TNTCWU  மாவட்டசெயலர் தோழர் .N .சோணைமுத்து உட்பட  43 தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .இந்த ஆர்ப்பாட்டத்தை CITU தலைவர்களில் ஒருவரான தோழர் .பா .விக்கரமன் துவக்கிவைத்து உரையாற்றினர் .CITU மாவட்ட செயலர் தோழர் .V பிச்சை நிறைவு உரையாற்றினர் .நமது மாவட்ட செயலர் தோழர் .எஸ்.சூரியன் கோரிக்கையை வலியுறித்தி பேசினார் .அனைத்து சங்கங்களிளிருந்தும் பல நூறு  தோழர்கள் கலந்து கொண்டது நல்ல அம்சமாகும். 

No comments: