Friday, 6 September 2013

03.09.13மாவட்ட செயற்குழு கூட்டம் . . . 

அருமை தோழர்களே! நமது மதுரை மாவட்டசங்கத்தின்செயற்குழு கூட்டம் 03.09.13 அன்று திருமங்கலத்தில் உள்ள சண்முக ராஜா மீட்டிங் ஹாலில், சீரும் சிறப்புமாக நடைபெற்றது.   நமது மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர் கே.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.  
செயற்குழு கூட்டத்திற்கு ஓரிருவர் தவிர, அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண்களும், பார்வையாளர்களும், ஒப்பந்த ஊழியர்களுமாக கிட்டத்தட்ட 200க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு அம்சமாகும்.
மாநிலசங்கநிர்வாகிகள்,எஸ்.ஜான்போர்சியா, சி.செல்வின்சத்தியராஜ்,
பி .ஆனந்தன் உட்பட, மாவட்ட நிர்வாகிகள், கிளைசெயலர்கள் ஆக மொத்தம் 28 பேர் ஆய்படுபொருளின் மீது உரையாற்றினர். செயற்குழு 8 தீர்மானங்களை நிறைவேற்றியது.
  • 27.09.2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது.
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் தீர்விற்கு இயக்கம் நடத்துவது.
  • அக்டோபர் இறுதிக்குள் மாநிலசெயலரின் தேதி பெற்று திண்டுக்கல்லில்  மாவட்டமாநாடுநடத்துவது .
  • மாநிலசங்க ஆலோசனைப்படி சில நிர்வாகிகள் மீதான நடவடிக்கையை ஒத்திவைப்பது.
  • CSC/CTOஎன்ற  2 கிளைகள் Mergerஆனதால் மாநிலசங்க ஒப்புதலோடுCSC என்ற ஒரே கிளையாக செயல்படும். 
  • BSNLசேவையை மேம்படுத்திட மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மத்திய,மாநிலசங்கங்களின்  ஆலோசனைப்படி நடத்துவது.
  • மதுரை மாவட்டLocal council மற்றும் Works committeeக்கான தோழர்களை இறுதிசெய்யப்பட்டது,மாநில,மத்திய சங்க ஒப்புதல் பெறுவது. 
  • மத்திய,மாநில,மாவட்டசங்கம் ஏற்கனவே,அறிவித்துள்ள நன்கொடையை தாமதமின்றி நமது உறுப்பினர்களிடம் வசூல் செய்து உரியகாலத்தில் மாவட்ட சங்கத்திடம் ஒப்படைப்பது.
தோழர் எஸ்.ராமலிங்கத்திற்கு பணிநிறைவு பாராட்டு....
நமது மாவட்ட சங்கத்தின் அமைப்பு செயலராக மிகவும் துடிப்புடன் ஒரு வாலிபனாக,தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் அருமைத்தோழர் எஸ்.ராமலிங்கம் கடந்த 31.08.2013அன்று இலாக்காவில்தான் பணிநிறைவு பெற்றார் .ஆனால் நமது சங்கப்பணியை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்,என  அனைவரும் மனதார மாவட்டசெயற்குழுவில் பாராட்டுரை வழங்கினர். தோழர் எஸ்.ராமலிங்கம் பணிஓய்வு காலம் சிறக்க மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக,தோழமையுடன் வாழ்த்துகிறது.

 

 
 
 
 
 
 ---என்றும் தோழமையுடன் .எஸ்.சூரியன்,மாவட்டசெயலர்.

No comments: