மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ரஷீத் மசூது குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அவருக்கு விதிக்கவுள்ள தண்டனை பற்றிய அறிவிப்பு அக்டோபர் 1–ந்தேதி வெளியிடப்படும் என நீதிபதி ஜே.பி.எஸ்.மாலிக் கூறினார்.
ரஷீத் மசூது, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 120 (பி), 420, 468 ஆகியவற்றின்கீழ் தண்டிக்கப்பட உள்ளார். இவற்றில் 7 ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குற்ற வழக்கில் அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டால், தண்டிக்கப்பட்ட நாளிலேயே எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., பதவியை இழந்து விடுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை 10–ந்தேதி தீர்ப்பு வழங்கியது.மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழல் வழக்கில் ரஷீத் மசூதுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி எம்.பி. பதவியை இழக்கப்போகிற முதல் அரசியல்வாதி ரஷீத் மசூது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment