அருமை தோழர்களே !
சில NFTE - WEBSITE-களில் 29.09.2013 அன்று நடைபெற்ற சென்னை சொசைட்டி General Body கூட்டத்தில் தோழர்.
வீரராகவன் CITU போக்குவரத்து ஊழியர்களால் தாக்கப் பட்டதாக வழக்கம்
போல் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டுள்ளார்கள். சொசைட்டி பேரவை கூட்டம் நடைபெற்ற
இடம் ஸ்ரீரிவாரூ வெங்கடசலபதி பாலஸ்" ஆகும். இம்மண்டபம் சென்னை வானரகம் பகுதியில் உள்ளது. சொசைட்டி கூட்டத்திற்கு BSNL-ID.CARD உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்
பட்டனர். 10-ற்கும் மேற்பட்ட
கவுண்டர்கள் மூலமாக காவல் துறையினுடைய மேற்பார்வையோடு நடந்தேறியது
{நமது BSNLEU சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்}. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக பனி ஓய்வில் சென்றுள்ள தோழர் C.K. மதிவாணன் உட்பட வெளியில் தான் நிற்க வேண்டிஇருந்தது. ஆகவே, வெளியாட்கள் குறிப்பாக CITU தோழர்களை வைத்து தாக்கியதாக கூறுவது கோயபல்ஸ் வேலை என்ற உண்மை புலப்படும்.

நடைபெற்ற பேரவையில் 40 தோழர்கள் பேச அனுமதிக்கப்
பட்டுள்ளனர்.
நியாயப்படி தமிழகத்திற்கு 11 இயக்குனர்களும், சென்னைக்கு 7 இயக்குனர்களும் விகிதாசார அடிப்படையில் பிரித்திருக்க வேண்டும்.
இருப்பினும் ஒற்றுமை கருதி தமிழ்நாட்டிற்கு 10 இயக்குனர்களும், சென்னைக்கு 8 இயக்குனர்கள் என்றும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த ஆலோசனையும்
BSNLEU சங்கம்தான் தந்தது
என்பது குறிப்பிட தக்கது. மேற்கண்டபடி தேர்ந்தெடுக்கப்பட்ட
18 இயக்குனர்களும், 2 பெண் இயக்குனர்களும், 1 SC/ST இயக்குனர்களையும் நியமனம் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
30.09.2013 அன்று நடைபெற்ற RGB
கூட்டத்தில் கீழ்கண்ட
முடிவுகள் எட்டப் பட்டுள்ளன.
1. 1.10.2013 முதல் வட்டி விகிதம் 16.5%-லிருந்து 15.5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2. அக்டோபர் 2013 சம்பளத்தில் DIVIDEND 12% வழங்கப்படும்.
3. ORDINARY லோன் 4 லட்சத்திலுருந்து 5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இது ஜனவரி 2014 முதல் அமுலுக்கு வரும்.
4. FAMIL WELFARE SCHEME
பிடித்தம் ருபாய் 600-லிருந்து 800-ஆக உயர்த்தப் பட்டுள்ளதால்,
இன்சூரன்ஸ் 3 லட்சத்திலுருந்து
4 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.
இம்முடிவுகள் நமது BSNLEU
சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
எஸ். சூரியன் - மாவட்ட
செயலர்.
No comments:
Post a Comment