அமெரிக்கா சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் கடற்படை வீரர்கள் தேர்வு மையத்தின் இணையதளத்தை சிரியாவின் மின்னணு ராணுவம் ஹேக் செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அதில் சிரிய ராணுவம் சார்பில் கடற்படை வீரர்களுக்கு கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது:அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, அன்புள்ள அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு,இது, கடந்த 3 ஆண்டுகளாக அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் சிரிய ராணுவத்தில் பணிபுரியும் உங்களது சகோதரர்கள் எழுதும் கடிதம்.உங்களது நாட்டின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு மற்றும் நாட்டுப் பற்றை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
அதேபோன்று, எங்களது நாடு மற்றும் மக்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் அன்பையும், நாட்டுப் பற்றையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒபாமா ஒரு துரோகி. அவர், அல் கொய்தா கிளர்ச்சியாளர்களைக் காப்பாற்றுவதற்காக உங்களது வாழ்க்கையை அபாயகரமாக்கி வருகிறார்.வீரர்களே, சிரியாவிற்கெதிராக அல்கொய்தா தீவிரவாதிகளுடன் ஒபாமா வைத்திருக்கும் கூட்டணி குறித்து உங்களது தோழர்களின் எண்ணங்களை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.உங்களைப் போன்று நாட்டிற்காக போராடி வரும் ராணுவத்தினருக்கு எதிராக உங்களை களமிறக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து உங்களது உயர் அதிகாரிகளுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. சிரிய ராணுவம் உங்களது நண்பன், எதிரியல்ல.எனவே, உங்களது மேலதிகாரிகளின் கட்டளைகளை நிராகரியுங்கள். தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக ராணுவப் பணிகளில் ஈடுபடுவோரின் உண்மையான நோக்கங்களை மனதில் நிறுத்துங்கள்.சிரிய ராணுவத்தினருக்கு எதிராக போராடுவதற்குப் பதிலாக, இரு நாட்டு ராணுவத்தினரும் இணைந்து நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுவதை நாங்கள் வெகுவாக வரவேற்கிறோம்.உங்களது சகோதரர்கள், சிரிய ராணுவம். இவ்வாறு அந்தக் கடிதத் தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் பல அமெரிக்க கடற்படை வீரர் கள் நாங்கள் சிரியாவிற்கு எதிரான ராணுவ தாக்குத லில் பங்கேற்க மாட்டோம் என்ற வாசகங்கள் அடங் கிய அட்டையுடன் இணை யத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தீக்கதிர் .....
No comments:
Post a Comment