Friday, 27 September 2013

அமெரிக்கா தவறான வழியில் செல்கிறது
68
சதவிகித அமெரிக்கர்கள் கருத்து
அமெரிக்கா தவறான வழியில் செல்கிறதுஎன்று 68 சதவிகித அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்க மக்களிடம் தேசிய அளவில் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.இந்த கருத்துக் கணிப்பில் அமெரிக்கர்களுக்கு ஒபாமா அரசு மீது அவநம்பிக்கை ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது.68 சதவிகித மக்கள் அமெரிக்கா தவறான பாதையில் செல்வதாக கருத்து தெரிவித்துள்ளனர். 25 சதவிகித மக்கள் அமெரிக்கா சரியான பாதையில் செல்வதாக தெரிவித்தனர். மேலும் 49 சதவிகித அமெரிக்கர்கள், தனிப்பட்ட முறையில் ஒபாமாவுக்கு எதிராக கருத்து கூறினர்.கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா இராக் போருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இதனால் அவருக்கு அமெரிக்க மக்கள் அமோக ஆதரவு தந்தனர். ஆனால் இப்போது ஒபாமா, சிரியா மீது ராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்கு அமெரிக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

53 சதவிகித மக்கள் சிரியா பிரச்சனையில் ஒபாமாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளனர். 31 சதவிகிதம் பேர் மட்டுமே ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதேபோல் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிபிஎஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் ஈரான் மற்றும் சிரியா பிரச்சினையில் ஒபாமாவின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிராக 50 சதவிகித அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: