Tuesday, 24 September 2013

சென்னை SOCIETY செய்திகள் . . .

சென்னை சொசைட்டிக்கு சொந்தமான .  .  .
90 ஏக்கர் நிலம் குலுக்கல் முறையில் நமக்கு கிடைக்கும் 
என ஆவலோடு கலர் கலரான  ஒப்புகை சீட்டை  
உறுப்பினர்கள் பத்திரமாக வைத்திருந்தனர்
ஒப்புகை சீட்டு வெறும் ஒப்புக்கு கொடுக்கப்பட்ட சீட்டு என்பது  20/09/2013 அன்று நடைபெற்ற RGB கூட்டத்தில் கலந்து கொண்டபின்புதான் புரிந்தது. மொத்தம் 176 RGB உறுப்பினர்கள். சென்னை 57 பேர்
தமிழகம் 119 பேர். இதில் சென்னையில் இருந்து  53 பேரும், தமிழகத்தில் இருந்து  103 பேரும் மொத்தம் 156 RGBக்கள்  கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத பலரையும் பார்க்க முடிந்தது
காரைக்குடி சுந்தர்ராஜனாகிய நான் 
RGB என்ற முறையில் பேசிய போது 
ஏற்கனவே முடிவு செய்தபடி வீட்டு மனைகளை பிரித்தளிக்க வேண்டும். அடுக்கு மாடி என்பது அடுக்கடுக்கான ஊழலுக்கு வழி வகுக்கும் என்று கூறிய போது அரங்கம் அதை ஆர்ப்பரித்து ஏற்றுக்கொண்டது
உடனே என்னை அடிக்க சிலர் பாய்ந்தனர்
அடுத்தடுத்து பேசியவர்களும் இதை வலியுறுத்தவே RGBக்களின் கருத்து தங்களின் திட்டத்திற்கு எதிராக போய்விடும் என்று புரிந்து கொண்டவர்கள் பெரும்பான்மை  RGBக்கள் கருத்தை கேட்காமல் இயக்குநர்கள் கூட்டத்தை கூட்டி 10 பேரில் 7 பேர் குடியிருப்பு கட்ட ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்
3 பேர் மட்டுமே வீட்டு மனை பிரிப்புக்கு  ஆதரவாய் இருப்பதாகவும்  மிக அவசர அவசரமாக அறிவித்து விட்டு கூட்டத்தை முடித்து விட்டனர்
ஏறத்தாழ 1300 கோடிக்கு வீடு கட்ட போவதாக கூறப்படுகின்றது
ஏற்கனவே பல ஊழல் வழக்குகளில் சம்பந்தம் உள்ள கட்டிட  காண்டிராக்டர் மூலம் வீடு கட்ட முயற்சிப்பதாக தெரிகின்றது
இதில் ஊழல் பண்ண அவசியமேயில்லை
1300 கோடியில் 10 சதம் அன்பளிப்பு/கமிஷன்  என்று சொன்னாலே 
130 கோடி கை மாறும்.  சிலர் வளம் பெறலாம்
ஆனால் தங்கள் வாழ்வில் சம்பாதித்த பெரும் பகுதி பணத்தை 
சொசைட்டிக்கு வட்டியாக செலுத்திய ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு பட்டையோ  நாமமோ நிச்சயம்  போடப்படும்.
எனவே  சங்க வித்தியாசமில்லாமல் 
ஊழலுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேர வேண்டும்.
சாதாரண ஊழியன் வட்டியாக கட்டிய பணம் 
அவனுக்கே  கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும்.
இறுதியாக
சொசைட்டி பிரச்சினையில்,பெரியோர்கள் சொன்ன 
சிவன் சொத்து குல நாசம் என்ற வரிகளே  நமது காதில் ஒலிக்கின்றது.
K. SUNDARRAJAN, STS,RGB, KARAIKUDI.

No comments: