புதிய பென்சன் நிதிச் சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் திமுக தலைவர் கருணாநிதி மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு துரோகம் இழைத்து விட் டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டி யுள்ளார். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு வெள்ளைக்காரன் காலத்தில் உருவாக்கப்பட்டது பென்சன் சட்டம். அவர் கள் ஓய்வு பெறும் காலத்தில் பிஎப், வைப்பு தொகை என தனி தனியாக உண்டு. இது மட்டுல்லாமல் மூன் றாவது பலனாக பென்சன் அளிக்கபட்டு வந்தது. காங்கிரஸ் அரசை பொறுத்த வரையில் 2003 ஆம் ஆண்டு புதிய சட்டத்தை கொண்டு வந்தது.பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்தது மட்டுமல்லாமல் 60 ஆண்டு களுக்கு மேலாக ஊழியர்கள் சேர வேண்டிய அரசாங்க கஜானாவில் இருக்ககூடிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பென்சன் தொகையை பன்னாட்டு கம்பெனிகள் பங்கு மார்க் கெட்டுக்கும், கார்ப்பரேட், ரிலையன்ஸ், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறது.
பென்சன் நிதி சட்டம் விவாதத்திற்கு வந்தபோது மக்களவையில் திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு அந்தமாசோதாவை எதிர்த்து பேசினர் மாநிலங்கள வையில் திமுக உறுப்பினர்களும் இந்த மசோதாவை எதிர்த்து பேசினார்கள், ஆனால் வாக்கெடுப்பு வருகிறபோது மத்திய, மாநில அரசு ஊழியர்களை பாதிக்கக் கூடிய பென்சன் உரிமையை குழி தோண்டி புதைத்து அதை திமுக ஆதரித்து சட்டமாக்கியது. இந்த சட்டத்தை ஆதரித்து மத்திய மாநில உழைப்பாளி மக்களுக்கு திமுக துரோகம் செய்து விட்டது இதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். உணவு பாதுகாப்பு மசோதா, புதிய பென்சன் திட்டம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு கலைஞர் பச்சை கொடிகாட்டி அதை ஆதரித்துள்ளார் என்றும் ஜி.ராம கிருஷ்ணன் குற்றம் சாட் டினார்.
மதுரை மாவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் 6 மாவட்டங் களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.மதுரை தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.எஸ்.ஜி.குமார் (ஐஎன் டியுசி) தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாலதிசிட்டிபாபு, வீ. பிச்சை(சிஐடியு), பி.எம். மூர்த்தி, எம்.நந்தாசிங் (ஏஐ டியுசி), ஆர்.கேசவன், வீ. பாதர் வெள்ளை(எச்எம் எஸ்), கே.எஸ்.கோவிந்தரா ஜன், பி.ராஜசேகரன் (ஐஎன் டியுசி), எம்.பசீர்அகமது, அல்போன்ஸ் ராஜா (எல் பிஎப்) ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தலைவர்கள் ஆர். தெய்வராஜ், நமது BSNLEU சங்கத்தின்சார்பாகமாநிலஅமைப்புசெயலர்தோழர்.C.செல்வின் சத்யராஜ்,மாவட்டசெயலர்,தோழர்.எஸ்.சூரியன்,மாவட்ட உதவிச்செயலர்,தோழர்.G.K.வெங்கடேசன்,மாவட்ட துணைத்தலைவர்,தோழர்.S.மனுவேல் பால்ராஜ், மாவட்ட அமைப்புசெயலர்,தோழர்.எஸ்.ராமலிங்கம் ,TNTCWU மாவட்ட உதவிசெயலர்,தோழர்.V . சுப்புராயலு மற்றும் தோழர்கள் R.சுப்புராஜ்,
N .செல்வம் உட்பட அனைத்து சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்
கானோர் கலந்துகொண்டனர்.
N .செல்வம் உட்பட அனைத்து சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்
கானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment