Saturday, 21 September 2013

மதுரை ஆவின் ஊழியர்கள் 8 பேரை நிரந்தரம் செய்ய நீதிமன்றம் உத்தரவு
மதுரை ஆவின் ஊழியர் கள் 8 பேருக்கு, 3 மாதத்திற் குள் பணிநிரந்தரம் வழங்கப் பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை பால் திட்டத்தில் 480 நாட்கள் பணியாற்றிய .செல்வம், கே.பாண்டி, ஆர்.லட்சுமணன், ஆர்.இளமாறன், பி.சேதுராமன், .தவமணி, ஜே.ஜான் ரஞ்சித்ராஜ்குமார் என்.பாண்டியராஜன் ஆகிய 8 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிற்சாலை ஆய்வாளர் உத்தரவிட்டார்.ஆனால், பணிநிரந்தரம் வழங்க மறுத்த மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம், தொழிற்சாலை ஆய்வாளரின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.பல்வேறு தேதிகளில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, தொழிற்சாலை ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் 480 நாட்கள் பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், தீர்ப் பாணை நகல் கிடைத்த மூன்று மாதங்களுக்குள் பணிநிரந்தரம் செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் டி.கீதா, பி.அன்பழகன் ஆகியோர் வழக்கை நடத்தினர்.இத்தகவலை தமிழக கூட்டுறவு சங்க ஊழியர்சங்கத் தின் பொதுச்செயலாளர் ஜி. எஸ்.அமர்நாத் கூறினார்.

No comments: