Thursday, 26 September 2013

திருச்சி பெல் ஊழியர்களுக்கு தேசிய விஸ்வகர்மா விருது . . .

திருச்சி பெல்லைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விஸ்வகர்மா விருதை கூட்டாக வென்றுள்ளனர்.
விலைக்குறைப்பு, உற்பத்தித் திறன் பாதுகாப்பு, தரம் மற்றும் தானியங்கி வழிமுறைகளுக்காக வழங்கப்படும் புதுமையான ஆலோசனைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா தினத்தையொட்டி புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா இந்த விருதினை வழங்கினார்.பெல்லின் பற்றவைப்பு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த துணைப்பொறி யாளர் சண்முகசுந்தரம் மற்றும் தொழில் வினைஞர்களான கண் ணன், சிவா மற்றும் பிரசாத் ஆகியோர் கூட்டாக பிரிவுசிக்கான விருதை வென் றனர்.

அனல்மின் நிலையங்களில் மிகமுக்கிய அங்கமான தலைப்பிகளின் வட்டுமுனை களில் புதுவிதமான பற்றவைப்பு முறைக ளை மேம்படுத்தியதற்காக இந்த விருது இவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதில் ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கும். இந்த புதிய தொழில் நுட்பத்தின் மூலம் நிறுவனமானது, ஆண்டு ஒன்றிற்கு சுமார் மூன்று கோடி ரூபாய்வரை சேமிக்க முடியும்.

No comments: