அரசின் அடிப்படையான கொள்கைகளை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடத் தயாராக வேண்டும்!
காப்பீட்டு ஊழியர்கள் மாநாட்டில் பி.டி.ரணதிவே அறைகூவல் 4-1-1983
காப்பீட்டு ஊழியர்கள் மாநாட்டில் பி.டி.ரணதிவே அறைகூவல் 4-1-1983
அரசாங்கத்துடனும் பல்வேறு நிறுவனங்களுடனும் சில்லரை சச்சரவுகளில் இதுவரை ஈடுபட்டு வந்த தொழிலாளி வர்க்கம் அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்த்து அடிப்படை கொள்கைகளை மாற்றுவதற்கான பெரிய போராட்டங்களடங்கிய புதிய சூழ் நிலையைச் சந்திக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என தோழர் பி.டி.ரணதிவே கேட்டுக் கொண்டார். தேய்ந்து வரும் ஜனநாயகம் : சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி தொடங்கு கின்ற காலத்தில் தொழிலாளர்கள் உரி மைகள் எதுவும் இன்றி இருந்தாலும் கூட தங்களது விடாப்பிடியான போராட்டங்களினாலும் தங்களது தொழில் வளர்ச்சி பாதிக்கக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாக சில சலுகைகளைக் கொண்டு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதலாளி களுக்கு ஏற்பட்டதாலும் தொழிலாளி வர்க்கம் சில சலுகைகளையும் உரிமை களையும் பெற்று முன்னேறியது. இதை யடுத்து வங்கி இன்சூரன்ஸ் தொழில் கள் வளர்ச்சியடைந்தன.
அதைத் தொடர்ந்து மத்தியதர வர்க்கஊழியர்களின் தொழிற்சங்க இயக்கமும் வளர்ச்சியடைந்தது.ஆனால் உலக பொது நெருக்கடி உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அனைத்துமாக சேர்ந்து இந்திய அரசாங்கம் ஒரு கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளியிருக்கிறது. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக இந்திய ஐஎம்எப்-பிடம் பெற்ற கடன்களை அடுத்து ஏற்றுக்கொண்ட நிபந்தனை களின் காரணமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மேலும் கடுமையாகி இருக்கின்றன.தொழிலாளி வர்க்கத்தின்பால் பின்பற்றப்படும் கொள்கைகள் மட்டுமல் லாமல் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் வகையில், மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டம் ஆகிய நடவடிக்கைகள் இதில் சில எடுத்துக் காட்டுகளே ஆகும். ஜனநாயகம் மேலும் மேலும் தேய்ந்துகொண்டே வருகிறது.
அதைத் தொடர்ந்து மத்தியதர வர்க்கஊழியர்களின் தொழிற்சங்க இயக்கமும் வளர்ச்சியடைந்தது.ஆனால் உலக பொது நெருக்கடி உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி அனைத்துமாக சேர்ந்து இந்திய அரசாங்கம் ஒரு கடுமையான கொள்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளியிருக்கிறது. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்காக இந்திய ஐஎம்எப்-பிடம் பெற்ற கடன்களை அடுத்து ஏற்றுக்கொண்ட நிபந்தனை களின் காரணமாக இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் மேலும் கடுமையாகி இருக்கின்றன.தொழிலாளி வர்க்கத்தின்பால் பின்பற்றப்படும் கொள்கைகள் மட்டுமல் லாமல் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கும் வகையில், மத்திய அரசு அடுத்தடுத்து பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் அத்தியாவசிய சேவை பராமரிப்புச் சட்டம் ஆகிய நடவடிக்கைகள் இதில் சில எடுத்துக் காட்டுகளே ஆகும். ஜனநாயகம் மேலும் மேலும் தேய்ந்துகொண்டே வருகிறது.
கனவில் தோன்றியதல்ல : பூமிதானா இயக்கம் நடத்த வேண்டும் என்று வினோபாபாவேக்கு திடீரென்று கனவில் தோன்றியதாம். அதுபோன்று இந்திய அரசாங்கத்தின் தாக்குதல்கள் அனைத்தும் அரசாங்கத் தலைவர்களின் கனவுகளில் தோன்றும் விசயங்கள் அல்ல.மாறாக இந்திய வர லாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சி களே இது. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிப்போக்குகளையும் ஒரு சேர பார்த்தால்தான் உள்நாட்டில் உள்ள நிலைமையை சரியாக புரிந்துகொள்ள முடியும். இந்த நூற்றாண்டின் காலனி ஆட்சிமுறை தகர்ந்து நொறுங்கியது. உலகம் முழுவதும் பல்வேறு சுதந்திர நாடுகள் தோன்றின. ஆனால் முத லாளித்துவ வளர்ச்சிப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்ட பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சிமுறை ஏற்பட்டிருப்பதை நாம் கண்டு வருகிறோம். அண்டை நாடுகளான பாகிஸ் தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகள் தோன்றி தொடர்ந்து வருவதையும் பார்க்கிறோம்.வறுமை பணவீக்கம், வேலை யில்லாத் திண்டாட்டம், பெருகிவரும் நமது நாட்டில் ஜனநாயக உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வரும் நம் நாட்டில் இத்தகையதொரு நிலைமை தோன்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சீர்குலைவு சக்திகள் : இவ்வாறு நாட்டில் மக்களின் துயரங்களும் அதிருப்தியும் பெருகி வரு வதையடுத்து சுரண்டப்படும் மக்களி டம் ஒற்றுமை ஏற்படுவதை தடுப்பதற் காக பல்வேறு சீர்குலைவு சக்திகள் முனைந்து செயல்பட்டு வருகின்றன. தங்களது துயரங்களுக்கு காரணம் அரசாங்கத்தின் முதலாளித்துவ வளர்ச்சி கொள்கைகள் என்ற அடிப்படை உண்மை மறைக்கப்பட்டு மாறாக, தான் ஒரு அஸ்ஸாமியன் என்பதால்தான், தான் சீக்கியன் என்பதால்தான், தான் ஒரு இந்து அல்லது முஸ்லிம் என்பதால்தான் இத்தகைய துயரங்கள் என்ற எண்ணத்தை சம்பந்தப்பட்ட மக்களின் மனதில் ஏற்படுத்தும் வேலையை இத்தகைய சக்திகள் செய்துவரு கின்றன. தான் ஒரு இந்தியன் என்ற எண்ணத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்பது இவர்களது முக்கிய நோக்கமாகும்.
திறமையற்ற அரசாங்கம் : கடந்த முப்பதாண்டுகாலமாக மத்தியிலும், மாநிலத்திலும் அந்த அமைச்சர்களுடன் நாம் கொள்கைரீதியாக வேறுபட்டவர்கள் என்றாலும் கூட அவர்கள் அவரவரர் வேலையை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பல நேர்மையற்றவர்கள் என்பது வேறுவிஷயம்.ஆனால் இன்று அவர்கள் நேர்மையற்றவர் களாக மட்டுமல்லாமல் திறமையற்றவர்களாகவும் ஆணவம் கொண்டவர்களுமாக இருக்கின்றனர். பஞ்சாபில் ஒரு அமைச்சர் தனது நண்பன் ஒருவர் இறந்தபோது அவருக்கு போலீஸ் மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடக்க வேண்டுமென ஒரு போலீஸ் அதி காரிக்கு உத்தரவிட்டார். அரசாங்கத்தின் உத்தரவின்பேரில்தான் அதை செய்ய முடியும் என்று கூற உடனே அமைச்சர் தானே அரசாங்கம் எனக் கூறி தனது உத்தரவை நிறைவேற்றும் படி கூற போலீஸ் அதிகாரியும் வேறு வழியில்லாமல் அதை நிறைவேற்றி விட்டதால் பத்திரிகைகளில் செய்தி வெளிவந்த பிறகு முதலமைச்சர் தலையிட்டு அமைச்சரைக் கண்டிக்க வேண்டியதாயிற்று. இத்தகைய மோசமான அரசாங்கம் நேர்மையற்ற, திறமையற்ற தலைவர் களால் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை காப்பாற்ற முடியாது. தன்னலங் கருதாதலைவர்களின், ஊழியர்களின் தியாகத்தாலும் குருதியாலும் உருவாக்கப்பட்ட ஒற்றுமையை இவர்களால் காப்பாற்ற முடியாது. மாறாக, தொழிலாளி வர்க்கம்தான் செய்ய முடியும்.
தொழிலாளி வர்க்கம் தவறுமானால்... : இவ்வாறு சூழ்நிலை மோசமாகிக் கொண்டே வரும்போது புதிய நிலைமைகளை எதிர்த்து போராடுவதற்கு தொழிலாளி வர்க்கம் தவறுமானால் வரலாறு தலைகீழாக மாறும். மீண்டும் உழைக்கும் வர்க்கம் கொத்தடிமைக்கூட்டமாக மாற்றப்படும்.உலக சமாதானத்தைப் பற்றி உழைக்கும் வர்க்கம்அக்கறையில்லாமல் இருக்குமானால் சோசலிச உலகம் அழிக்கப்படும். ஏகாதிபத்தியம் உலகத்தை தனது இறுக்கமான பிடிக்குள் மீண்டும் கொண்டுவரும். நமது நாட்டில் எமர்ஜென்சி பிரகட னப்படுத்தப்பட்டபோது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி அதை ஆதரித் ததை மறந்துவிடக்கூடாது. எமர்ஜென் சியை ஆதரிக்காத பகுதி தொழிலாளர் கள் கூட அதை எதிர்த்து கிளர்ந்தெழ வில்லை. நாட்டில் ஒன்றுமே நடக் காதது போலதான் அவர்கள் நடந்து கொண்டார்கள். எமர்ஜென்சி போன தென்னவோ உண்மை. ஜனநாயக உரிமைகள் மீட்கப்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் தொழிலாளர்கள் மட்டும் உடனே கிளர்ந்தெழுந் திருந்தால் அந்த எமர்ஜென்சி மூன்று நாட்களாவது தாக்குப்பிடித்திருக்க முடியுமா? இப்போது நடைபெறுவது என்ன? எமர்ஜென்சி தவணை முறையில் புகுத்தப்படுகிறது என்பதை மறக்கக்கூடாது.சீர்குலைவு சக்திகள் எதிர்த்து நாடு முழுவதும் மத, இன, மொழி அடிப்படையில் மக்கள் பிளவுப்படுத்தப்பட்டு வரும் வேளையில் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு கடந்த ஒருவருடமாக பம்பாய் நகரில் ஒன்றுபட்டு போராடி வருகிறார்களே! உழைக்கும் வர்க்கம்தான் இந்த ஒற்றுமையை உருவாக்க முடியும் என்பதை தானே இது காட்டுகிறது.
கூட்டுக்குள் இருந்து வெளியே வாருங்கள்! : பொதுவாக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு கொச்சையான ‘தொழிற்சாலை உணர்வு’ நிலவி வருகிறது. அரசாங்கத்தின் கொள்கைகள் சமுதாய அரசியல் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சி போக்குகள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.தங்களது தொழிற்சாலையை அவை தாக்கும் போது மட்டுமே அவர்கள் விழித்துக் கொள்ள தொடங்குகின்றனர்.வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி அக்கறையில்லை. இயந்திரங்கள் புகுத்தப்படும்போது தங்களது வேலையை பாதுகாத்துக் கொள்வதில் மட்டுமே அவர்களது அக்கறை தங்களது மக்களை அது பாதிக்குமே என்பதே அவர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. விவசாயிகள் யார்? தொழிலாளர்களின் பெற்றோர், சகோதரர்கள் தானே அவர்கள்.விவசாயிகளை, கிராமப்புற ஏழை மக்களை நகரத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துவதற்காக முயற்சிகள் நடைபெற்றுக் கொண் டிருக்கும் இந்தக் காலத்தில் அத்தகைய பிரச்சனைகளுக்காக போராடுவதற்கு தொழிலாளி வர்க்கம் தவறுமானால் அந்த வர்க்கம் தன்னை அறியாமல் தனக்கே துரோகம் இழைக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
ஆகவே,ஊழியர்கள் தங்களது தொழில், தங்களது பிரச்சனைகள் என்று மற்றும் இருந்துவிடாமல் தங்களது கூட்டுக்குள் இருந்து வெளியே வந்து சர்வதேச தேசிய சூழ்நிலையின் பின்னணியில் உழைக்கும் வர்க்கத்தின் மொத்தப் போராட்டத்தின் பின்னணி யில் செயல்பட வேண்டும். வரலாறு இது உங்கள் மீது சுமத்தியிருக்கும் பணி.
No comments:
Post a Comment