இலங்கையில் தமிழ் மக்கள் வசிக்கும் வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக் குப்பின்னர் முதல் முறையாக மாகாண சட்டசபைத் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது.இவர்களில் மிகப்பெரும் பான்மையானவர்கள் தமிழர்கள்ஆவர்.இலங்கை ராணுவத்தினர் உள்ளூர் காவலர்களுடன் வீதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த தேர்தலை, 2ஆயிரம் உள்ளூர் மற்றும் வெளி நாட்டு கண்காணிப்பாளர் கள் பார்வையிட்டனர்.மாகாணக் கவுன்சில் உறுப்பினர்கள் 36 பேரைத் தேர்வு செய்வதற்காக இந்த தேர்தல் நடைபெற்றது.யாழ்ப்பாணம், கிளி நொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மற்றும் வவுனியா மாவட்டங்கள் வடக்கு மாகாண சட்டசபையில் இடம் பெற்றுள்ளன.
இந்த மாவட்டங்கள் பல ஆண்டுகள் எல்.டி.டி.இ.யினரின் வசம் இருந்தது குறிப்பிடத் தக்கது.1987ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம் நிறைவேற் றப்பட்ட பின்னர் முதல் முறையாக தேர்தல் தற்போது நடைபெற்றுள்ளது.தேர்தலின்போது சில வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு ராணு வத்தினர் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முதல் முறையாக 1988ம்ஆண்டு தேர்தல்நடைபெற்றது.தற்போதைய தேர்தலில் 906 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.தேர்தல் துவங்கிய போது வாக்குப்பதிவு மந்த மாகவே இருந்தது. வாக்கு சாவடிக்கு நீண்ட துரம் நடந்து செல்ல வேண்டியிருந்ததால் வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை என தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்தன. இங்கு 5 வேட்பாளர் களை தெரிவு செய்வதற்காக 12 கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக்குழுக்களைச் சேர்ந்த 160 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.மாவட்டத்தில் பல இடங் களுக்கு வாக்களர்களை ஏற்றி வாக்குச்சாவடி அமைந் துள்ள இடங்களுக்கு இறக்கி விடுவதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்து சேவைகள் பலவற்றை போலீசார் தலையிட்டு நிறுத்த முயற்சி செய்தனர். கிளிநொச்சியிலும் இதே போன்று நடந்தது. எனினும் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் மன்னார், கிளி நொச்சி மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்நிலையில், வடமாகாணத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள் ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் முதலமைச்சர் வேட் பாளர் நீதிபதி சி.வி. விக் னேஸ்வரன் தெரிவித்தார்.இதேவேளை, குடிமக்கள் போல வருகை தந்த ராணுவத்தினால் பலபகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தலையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக முறையிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment