Monday, 16 September 2013

மாநில / மாவட்ட செயற்குழுவின் முடிவுகளை அமுல்படுத்துவோம். .

அருமைத்தோழர்களே! அனைவருக்கும் வணக்கம். . .

நமது மத்திய, மாநில,மாவட்ட செயற்குழு கூட்டங்கள் எடுத்துள்ள முடிவுகளை சிரமேற்க்கொண்டு அனைவரும் அமுல்படுத்திட வேண்டுகிறோம். நமது மத்திய சங்கம், அணைத்து கேடர்களுக்குமான, அதிமுக்கிய பிரச்சனைகளை வடித்தெடுத்து, அதன் தீர்வுக்காக 3 கட்ட போராட்டத்தை அறைகூவல் விடுத்தது. இதுகாறும் ஆர்ப்பாட்டம், 3 நாள் தர்ணா என இரண்டுகட்ட போராட்டத்தை நாம் இந்தியா முழுமைக்கும் நடத்தியுள்ளோம். இச்சூழலில் நிர்வாகம், நமது நியாயமான  கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தைக்கு நமது மத்திய சங்கத்தை அழைத்துள்ளது, ஊழியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளில் ஒரு நியாமான தீர்வை நிர்வாகம் நமது சங்கத் தலைமையுடன் ஏற்படுத்தவில்லை எனில், அடுத்தகட்ட போராட்டமான 27.09.2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை உக்ரமாக நடத்த வேண்டியுள்ளது.
  • அனைத்துகிளைகளிலும், தியாகிகள் தினமான 19.09.2013 அன்று கோரிக்கைவிளக்க கூட்டத்தை நடத்தவேண்டும், வாய்ப்புள்ள மாவட்ட சங்க நிர்வாகிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.
  • ஊழியர்கள் அனைவரின்  மத்தியில் 30 அம்ச கோரிக்கைகளை விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும்.
  • கோரிக்கைகளை விளக்கி அனைத்து கிளைகளிலும் "பிளக்ஸ் போர்டு"வைக்கவேண்டும்.
  • மாநிலசங்கத்தால், ஏற்கனவே போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அனைத்து கிளைகளுக்கும்,நேரடியாக கோரிக்கைகள் அடங்கிய நோட்டிஸ் அனுப்பி வைக்கப்படும்.
  • ஊழியர்கள் அனைவரிடமும், மத்திய, மாநில, மாவட்ட சங்கங்களுக்கான நிதியாக தலா ரூபாய் 100 வீதம் நிதிதிரட்டி, ஆகமொத்தம் ரூபாய் 300 வசூல் செய்து மாவட்ட சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும்.
  • நமது சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு 2013-நவம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறும்.  
தாமதமின்றி, இப்போதிருந்தே  திட்டமிட்டு செயலாற்றுவோம், நமது நியாயமான கோரிக்கைகளை வென்றிடுவோம். 

---என்றும் தோழமையுடன், எஸ்.சூரியன் ... மாவட்ட செயலர்.

No comments: