Monday, 23 September 2013

இலங்கையில் தமிழ் தேசியக்கூட்டணி வெற்றி . .

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற வடக்கு மாகாணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில், தமிழ் தேசியக்கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மொத்த வாக்குகளில் 84 சதவீத வாக்குகளைப் பெற்று 38 இடங்களில் 30 இடங்களை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்ட ணிக்கு நமது சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலையொட்டி இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து இருந்ததாக புகார்கள் எழுந்தபோதும், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து, ஜனநாயக ரீதியில் தங்களது தீர்ப்பை அளித்துள்ளனர். உரிய அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி தேவை என்ற தங்களது எண்ணத்தை இந்த தேர்தல் மூலமாக தமிழ் மக்கள் உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.மக்களின் இந்தத் தீர்ப்புக்கு இலங்கை ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும்.


தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சித்தது. இது தவறான பாதை என்பதை மக்கள் தற்போது தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர். இனி, இலங்கை அரசாங்கம், மக்களின் மகத்தான நம்பிக்கையை பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டணி அதிகாரப்பரவலுக்கான பேச்சுவார்த்தைகளை நடத்திட வேண்டும், 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து மற்றும் அதிகாரப்பரவல் அளித்திட இலங்கை அரசை இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமெனநமது சங்கம்  அரசை வலியுறுத்துகிறது.

No comments: